பட்டணமா பட்டிக்காடா

வெட்ட வெளிக் காடு
வெறுத்தவங்க ஓடு
வெள்ளிக் கிண்ணம் பாரு
வெங்காயங் கடிச்சி உண்ணும் சோறு !

பட்டப்பகலாட்டம் மாநகரம் இரவினிலே
இருந்தும் இருட்டுக்குள்ள உண்ணுராக சோறு
வெந்ததா வேகலையா ஏதும் அறியா கூரு
வந்தவரை திண்ணு பின்
நொந்து கொள்ளும் பாரு

காலை கதிரவன் முகத்தில்
கண்விழிக்கும் மனித ஜாதி
கண்மாய் குளத்தில குதித்து குளிக்கும்
கல்லாட்டம் உடம்பை வளர்க்கும் உழவனுங்க

பத்துமணிக்கு விடியளுங்க
பத்தியமானா சாப்பாடுங்க
பார்த்து பார்த்து உண்ணுபுட்டு
சோப்பலாங்கியா மாறி மாறி
மாநகர வாழ்கையில் மாடுமாதிரி திரியுறாங்க

பணம் பெட்டி நிறையா இருந்தும்
கல்லாட்டம் மனம் மட்டும்
கையில் காசில்லாட்டியும்
அக்கறையா வாழும் மனிதன்
கரிசல் காட்டு மனிதந்தானுங்க !

எழுதியவர் : புதியபாரதி (18-Sep-14, 1:21 am)
பார்வை : 63

மேலே