இப்படிக்கு இடிந்த வீடு
இடிந்துபோன எனக்குள் இன்னும்கூட
இழையோடிக் கொண்டிருக்கிறது !
இணைந்திருந்த உங்கள் இதயங்களின்
இன்ப இராகங்கள் !
சிற்றின்பம் தேடி சிதறிப் போனவர்களே
கூடி வாருங்கள் !
மண்ணாகும் என்னை
வாழ்விக்க அல்ல !
நீங்கள் அறிந்த உறவுகளை
உங்கள் வருங்காலம் மறவாமல் இருக்க !
மாறுங்கள் மீண்டும்
ஒருகூட்டுப் பறவைகளாக !
இப்படிக்கு
இடிந்த வீடு