ஆட்டோகிராப் சொல்லி மறந்த கதை பாகம் 1

(இந்த வரிகள் பலரின் வாழ்வில் சொல்லி இருந்தவை, சொல்லி கொண்டு இருப்பவை, சொல்ள்ளபோவது இதுவே . இயக்குனர் சேரன் சொல்ல மறந்த கதையில் மிதி பாதி இதுவாகவும் இருக்கலாம் இது. கதை இல்லை என்று நீங்கள் சொன்னால் நீயும் எனது நண்பன் தான். எனது நண்பன் பார்வையிலும் எனது பார்வையிலும் பார்க்கப்பட்டவை )

திருவண்ணாமலை பக்கத்துல போளூர் தாலுக்க . அதுக்கு பக்கத்துல காந்த பாளையம் கிராமம் பேருக்கு ஏத்தமாதிரி அந்த ஊர்ல ஒரு ஈர்ப்பு இருக்கும் கடைசில உங்களுக்கே புரியும் . போளுர்ல இருந்து government பஸ் ஒண்ணுதான் போகும் போடு நம்பர் 10 னு நினைக்கிறேன் இந்த கிராமத்துக்கும் எனக்கு ஒரு தொடர்பு உண்டு அட சென்னை ல இருக்குற இவனுக்கு இப்படி அந்த தொடர்பு நினைக்கதிக அது என் ஊரு தான். மூன்று பக்கம் காடு ஒரு பக்கம் நிலம் இந்தியாவின் அழகை போல அப்படியே இருக்கும் ஜவ்வாது மலை தொடர் பக்கத்துலே இருக்கறதாலே என்னமோ அப்படி ஒரு வாசமான பூமி.

அருவாள் மீசைவுடன் ஆறடி ஐயனாரை பார்க்கும் போதெல்லாம் கால் தெறிக்க ஓடும் காலம் கடந்து போய்விட்டது.
அம்மை அப்பா கிட்ட ஆசைப்பட்டதை வாங்க வரண்ட பூமியில் பிரண்டு பிரண்டு அழத காலம் எங்கே ? அந்த அனுபவம் மட்டும் அப்படியே ஒளி வீசுகிறது ஒவ்வொரு வருடமும் வருவதாகவே சொல்லிய வார்த்தைகள் நினைக்கும் போது கொஞ்சம் கோவத்திலே ஐயனார் !!!

கடந்த காலத்தில் கற்பனை கோட்டைகள் எங்கே , அப்பாக்கு பயந்து ஒளிந்த பாழ் மண்டபம் எங்கே google map களில் தேடியும் கிடைக்காத உள்ளுறு அதிசயங்கள் எங்கே , மாசுக்கு விளக்கம் கேக்கும் எங்க ஊரு மக்கள் புழுதி மடிந்த பூக்களாய் ஆனது இப்படி ? மண்டபங்கள் , பரந்த வயல்வெளிகள் இடமெல்லாம் இப்போ மண்ணாகி கிடப்பது ஏன் ? புல் விளைந்த பூமியை நெல் விளைந்த விவசாயி இப்போ எங்கே ,
எரி , குளம் வாகனம் ஏறாத மேடுகள் , மா தென்னை தோப்புகள் தொலைந்தாக complaint ஏதேனும் கொடுக்க பட்டுஇருக்குமா அடையலாம் இல்லாமல் போன நாகரிகம் எங்கே. ஒரு தெய்வம் , ஒரு ஊரியில் ஒரு அரசன், ஒரு அறிவாளி , ஒரு கவிஞன் , ஒரு ஆயிரம் விவசாயி இப்படியே கேட்டு வளர்ந்த இந்த மனம் கால் நூற்றாண்டு கடந்த பின் கருணை அடிப்படையில் நினைத்து பார்த்துகொண்டு இருக்கிறது காலத்தில் கட்டாயத்தின் விளைவால் இது ? இயந்திரத்தில் அடைந்த அச்சாணி யாக இதுவரை அடைப்பட்டு இருந்தேன் என்று என்னையே ஒர வஞ்சகமாக திட்டிவிட்டது மனம். முதிர்ந்து தோல் சுருங்கிய முகங்களை பார்க்கவே முடியவில்லை கலர் கலர் ஆடையில் கலபுல்லாக கிராமங்கள் நானும் அப்படிதானே இருக்கிறேன் என்று கண்ணாடியை பார்த்து முறைத்துகொண்டேன் , இந்த நாகரிக வளர்ச்சியில் சென்னை என்ற மோகம் இப்பதான் பலர் இதுவரை இழந்த ஒன்றை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெளி நாடுகளில் கூட அப்படி ஒரு அழகன கிராமம் இல்ல , படிக்கரபோ நாங்கதான் ஹீரோ அப்போ பத்தாவது படிக்கிற சாமீ பெரிய பெரிய புக்ஸ் syllabus அந்த வருஷம் தான் மாறிச்சி , ரெண்டு bag புல்லா புக்ஸ் அந்த சைக்கிள் மட்டும் வாய் இருந்த நான் இனிக்கு லீவ் டா சொல்லிருக்கும் அப்படி ஓர் வெயிட்.காலையிலே பொறுப்ப குளிச்சிட்டு கிளபிடுவேன் , 7.00 மணிக்கு. ஏர் மாடுகளுடன் வேட்டியே வாரிகட்டிகொண்டு உழுவும் அழகு அப்படியே கானயாகி போனது .

போனவாரம் நண்பன் பேசிய ஒரு வார்த்தை மட்டும் ஒலித்துகொண்டே இருக்கிறது "நான் தான் வீரா பேசுற டா எப்படி இருக்க டா , பாது எவளோ நாளாச்சி என்ன மறந்துட்டியா நண்பா , அடுத்த வாரம் திருவிழா இந்த வருசமாவது வா டா எனக்கு பையன் பொறந்து இருக்கான் , நீ கண்டிப்பா இந்த வருஷம் வரணும் அமா சொல்லிட இல்ல நான் இனி உனக்கு போன் பண்ணமாட" என்னடா பேசாம இருக்க என்கிட்ட ரெண்டு ரூபாதான் இருக்கு போன் கட் ஆகிடும் தப்ப நினைசிக்கத எல்லாரும் உன்ன கேட்டங்கடா , நம்பகுட படிச்சானே நவாபளையம் முருகன் அவன் உன்ன கேட்ட போன வாரம் புதூர் சந்தையில பார்த்தேன் இங்க பாரு நீ வரல நான் பேசமாட , அம்மா அப்பா எல்லாரும் கேட்டதா சொல்லு உங்க wife இப்படி இருக்காங்க உனக்கு பையன்னு சொல்லவே யாரோ ஒருத்தர் சொல்லி கேள்வி பட்ட ஆமா ...................... போன் கட் ஆகிடுச்சி என்னால ஒரு வார்த்த கூட முழுசா பேச விடல ..hmm hmm என்ற வார்த்தை தவிர கள்ளகபடம் இல்லாத பேச்சி அவன் என் நண்பன் தான் சின்ன வயசுல இருந்த இப்ப வரைக்கும் இல்ல எப்பவும் , எத்தனை வருஷம் வர வர னு சொல்லி அவன ஏமாத்தறது எனக்கு முன்னாடியே தெரியும் திருவிழா னு அதான் ஆபீஸ் சொல்லி எப்பவோ ஒரு வாரம் லீவ் போடு டா . இந்த வருஷம் எப்படியாவது ஊருக்கு போய் நான் உடுண்டு பெரண்டு வளர்த்த கிராமத்துல என் பையன் பாதம் படனும் எனக்கு ஆசைதான்.

காலையிலே ...............


----மீண்டும் மை உதறும் வெள்ளைத்தாளில் ..............

எழுதியவர் : வேலு (18-Sep-14, 5:19 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 145

மேலே