அழியாத கவிதைகள் 0034

நான் ஜனனித்த போது
என் அழுகையோசை
என் தாய்க்கு கவிதை
நான் முதல் உச்சரித்த கவிதை ''அம்மா''
பாவையின் பாதத்தால்
ஏறிமிதித்து கடந்து சென்ற போது
நான் அழுத வார்த்தையும் கவிதை
விதி என்னை துரத்திய போது விம்மி விம்மி
நான் அழுத வார்த்தையும் கவிதை...
சமுகம் எனை தள்ளி வைத்தபோது
தலை குனிந்து அமுக்கமாய் அடக்கி வாய்த்த
அவமானங்கள் கொப்பளித்த வார்த்தைகளும் கவிதைகள்..
தனக்காகயில்லாமல் பிறருக்காய்
தன் வாழ்வை அர்ப்பணம் செய்து
கண்மூடி, கண்மூடாது போனவர்களின்
கனவுகளும் கவிதைகள் அவை ஒருநாள்
நனவாகும் போது அவர்களே அழியாத கவிதைகள் ....

எழுதியவர் : அ க ம ல் தா ஸ் (18-Sep-14, 8:40 pm)
பார்வை : 138

மேலே