அன்பு தங்கைக்காக 555

தங்கை...
நான் எது செய்தாலும்
என்னை திட்டுபவள்...
ஆசையாக கேட்பதை
வாங்கி கொடுத்தாலும்...
கோபம் கொள்பவள்...
கேட்ட நிமிடத்தில்
கிடைக்கவில்லை என்று...
நான் வெளியூர் எங்கு
சென்று வந்தாலும்...
எனக்கு என்ன வாங்கிட்டு
வந்த என்று திட்டுபவள்...
இபோதெல்லாம் அண்ணா அண்ணா
என்று மட்டுமே அழைக்கிறாள்...
என் தங்கை
வளர்ந்துவிட்டாலாம்...
மீண்டும் என்னை
திட்டுவாளா,,,
போடா,பேய்,
பிசாசு,எருமை என்று...
என் அன்பு தங்கையை
நான் பிரிந்தேன்...
அவள் திருமணத்தில்...
வருடங்கள் பல கழித்து
என் தங்கையும் பிரிவால்...
அவள் ஆசை
மகளை...
மணமகனாக என் மகன்
மணமேடையில்.....