நெஞ்சினிலே Episode 05
நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 05
ஒரு சில நிமிடம் கழித்து ராதாவும் அவளுடைய 2 நண்பர்களும் வந்தனர் அந்த வாசலுக்கு வந்து ரவியின் அருகில் சென்று
ராதா : " என்னங்க ஐஸ் கிரீம் வாங்கி தரவா?"
ரவி : (மனதுக்குள்) " என்ன கொடுமடா இத நீதானடா கேட்கணும்" " இல்லங்க வேணா"
ராதா : " இல்ல இல்ல... இந்தாங்க காசு 4 ஐஸ் கிரீம் வாங்குங்க "
என்று பணத்தை கொடுத்தாள்.
ரவி : " அண்ணா 4 ஐஸ் தாங்கலன் "
ஐஸ் விற்பவர் : " தம்பி 4 ஐஸ்கு காசு போதாது " ( சத்தமாக )
ரவி : ( மனதுக்குள் ) " இது வேறயா இந்த நேரம் பார்த்து ஒருவா காசு கொண்டுவரலையே என்ன பண்றது "
" ராதாட்ட சொல்ல வெக்கமா இருக்க" "கொஞ்சம் நில்லுக இந்தா வாறன்"
சொல்லி விட்டு இல்லத்தின் அருகில் சென்று அவனது நண்பனிடம் ...
ரவி : " மச்சான் 50 ரூபா இருந்தா தாடா நாளைக்கு தாரன்"
நண்பன் 2 : " மச்சான் என்னடையும் காசு இல்லடா ஒன்னும் நினச்சிகாதடா "
ரவி : " சரிடா விடு விடு "
இதை ராதாவும் அவளுடைய நண்பர்களும் பார்த்து கொண்டிருந்தனர். இதை ரவி பார்த்து விட்டான்.
ரவி : ( மனதுக்குள் ) " என்ன Timing டா இது "
ராதா : " என்னங்க காசு தரவா? " என்று கேட்டாள் ராதா.
ரவி : " கொஞ்சம் Wait பண்ணுங்க இந்தா வாரன் "
சொல்லி விட்டு Bike ஐ எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றான்.
ரவி : " அம்மா 100 ரூபா காசு தாங்கலன் "
அப்பாவின் அம்மா : " ரவி இந்தா " என்று 500 ரூபா கொடுத்தாள்.
ரவி : " அம்மா பாட்டி போய்ட்டு வாறன் "
சொல்லி விட்டு வேகமாக சென்றான் பாடசாலைக்கு..
அங்கு சென்று 4 ஐஸ் வாங்கிவிட்டு பணத்தையும் அவர்களிடம் கொடுத்தான்.
விளையாட்டு போட்டி முடிவதற்கு முன்பாக Bike ஐ வீட்டில் வைத்து விட்டு மீண்டும் பாடசாலை சென்று போட்டியெல்லாம் முடிந்த பின்னர் கொஞ்சம் இரவாகி விட்டது எல்லோரும் வீடு நோக்கி சென்றனர். ரவியும் ராதாவும் கதைத்து கொண்டே வீடுகளுக்கு சென்றனர்......
தொடரும்.............