ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 03 - சந்தோஷ்

தொடர்ச்சி : 03
-------------------------

உலகிலேயே மிக நீளமான அரசமைப்புச் சட்டம் கொண்டது இந்தியா. அம்பேத்கார் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினால் 1947 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் விவாதித்து 1950 - ஜனவரி 24 தேதி பிரிட்டிஷ்காரன் அறிவுறுத்திய அரசமைப்புச் சட்ட வரைவு மன்றத்தினால் ஒப்பதல் பெற்று 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ம் நாள் அமுலுக்கு வந்தது. அதாங்க இந்திய குடியரசு தினம். இதில்....

இந்திய இறையாண்மை சட்டம் என்பது இப்பொதெல்லாம் ஓர் அரசாங்கத்தின் கையலாகாதனத்திற்கு கூலி வேலை பார்க்கப்படும் ஒரு வேலைக்காரனாகவே இருக்கிறது. ஆகாத ஒருவன், வேண்டாத எதிர்க்கட்சி, தீர்க்கப்படமுடியாத விசாரணைக்கு இந்த கைப்பிள்ளை வலுவாகவே அரசாங்கத்திற்கு கைகொடுப்பான்.
அட ! இறையாண்மை சட்டம் ,இறையாண்மை சட்டம் என்கிறார்களே .. அப்படி என்னாதான் இருக்கிறது இறையாண்மை சட்டத்தில்..............??? விடை இருக்கிறது. சரியான பதில் தெளிவாக தெரிவதில்லை சாமானிய மக்களுக்கு..!. இதுதான் எதார்த்தம், இதுதான் இந்தியச் சட்டங்களின் மகத்துவம்...!!!

இந்திய மக்களுக்கு நீதி, சமத்துவம், சுதந்திரம் இவற்றை உறுதி செய்வதாகவும், சகோதரத்துவத்தை வளர்க்க முயல்வதாகவும் சொல்லும் நம் அரசமைப்புச் சட்டம், இந்தியா ஒரு தனி இறையாண்மை கொண்ட, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனப் பிரகடனம் செய்கிறது.

இங்கே முரண்படுகிறது நம் இந்தியச் சட்டம்..! மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு.. பெரும்பான்மை இனத்தினவர் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்து இருக்கிறது சிறுபான்மையினத்தவர் என்று ஒரு குறிப்பிட்ட மதங்களை வாக்குக்கு மட்டும் சார்ந்து பலசில கண்ணாமூச்சி காரியங்களை செய்துக்கொள்கிறது. அரசியல் சதுரங்கத்தில் இந்து முஸ்ஸீம், கிறிஸ்துவர்களை பகடை காய்களாக உபயோகித்துக்கொள்கிறது. தேவைப்பட்டால் தமிழர் நலன்,. ஆட்சிக்குவந்தால்.. இறையாண்மை நலன். ! பெரியார் சொன்ன வெங்காயத்தை இறையாண்மையை வெறுத்து சாதாரணமானவன் எவனாவது சொன்னால்.. தடா வரும் பொடா பாயும்..
-- அட போடா என்று வீரம்முழுங்க எழுதமட்டுமே நம்மால் முடியுமா? எதிர்க்க முடியாதா?

இதுவரை இறையாண்மை சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் சதவீதம் பார்த்தால் பெரும்பாலும் அப்பாவிகளே...! அப்படிப்பட்ட அப்பாவிகளான தினகரன், காவியா மற்றும் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவ அமைப்பு நிர்வாகிகள் மீது இந்திய இறையாண்மை சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்டி சபாஸ்டின் உத்தரவினால், மாவட்ட கல்வி அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் தினகரன் படிக்கும் அந்த கல்லூரி நிர்வாகம் காவியா மற்றும் தினகரனை கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயப்பிரகாஷ் முகத்தில் வெற்றி ஓளி...! சாதாரண குடிமகனை கைது செய்வதில் எப்போதும் காவல்துறை தாமதம் செய்யாது. கடமை , கண்ணியத்துடன் புறப்பட்டது காவல்துறை வாகனம் காவியா- தினகரன் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனையை நோக்கி...!

----------------------------------------------------

தினகரன் சற்று உடல்நலம் தேறிவிட்டான். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து பொது பிரிவுக்கு மாற்றப்பட்ட தினகரன் கேட்ட முதல் கேள்வி “ காவியா எங்கே அப்பா ? “

” தினா.. . அவ ரெஸ்ட்ல இருக்கா... சரியா.. நாளைக்கு நீ காவியா கூட பேசலாம். இப்போ நீ உன் உடம்பு பார்த்துக்கோ.. இந்தா இந்த புக்ஸ்லாம் படி. “ என்று சில கவிதை, இலக்கிய புத்தங்களை தினகரனுக்கு கொடுக்க முற்பட.....

” அமைதியா இருந்த என் பொண்ணை நீதான் போராட்டம் அது இதுன்னு கூட்டிட்டு போயி இப்படி இந்த நிலைமைக்கு கொண்டு வந்தீயா.. எம் புள்ளைக்கு எதாவது ஆச்சு.. உன்னை சும்மா விடமாட்டேன்” காவியாவின் தந்தை.

“ சார், கொஞ்சம் பொறுங்க, இது ஆஸ்பிட்டல், கத்தி கூச்சல் போடாதீங்க. போராட்டம் எல்லா ஸ்டூண்ட்ஸ் சேர்ந்து பண்ணினது. அதுக்கு என் பையனை மட்டும் குத்தம் சொல்ல அவசியமில்லை” தினகரனின் தந்தை மெலிதான கோவத்தோடு கொஞ்சம் அடக்கமாக பதில் சொல்ல

“எனக்கு எல்லா தெரியும் சார். இவன் கவிதை எழுதுவனாம். அவ படிப்பாளாம்... எல்லா கூத்தும் எனக்கு இப்போதானே தெரியுது.. “

“ சார் கொஞ்சம் லிமிட்டா பேசுங்க. படிக்கிற பசங்க ஒன்னுக்கு ஒன்னு ஹெல்ப்பா தான் இருபபாங்க இத போயி கூத்து அது இதுன்னுட்டு” தினகரனின் தந்தைக்கு எரிச்சல் மேலோங்கியது.

“ நீங்க ஏன் சார் பேசமாட்டீங்க.. சாக கிடப்பது என் பொண்ணு ஆச்சே.. இதோ உங்க பையன் நல்லாதானே இருக்கான்... ” ஒரு குடுவையில் பொங்கிய வெந்நீர் வெப்பம் ஏறி வெடிக்க ஆரம்பிக்கும் தருணம் போல வெடித்து சிதறினான் தினகரன். .

“ அப்ப்ப்பா .......... என்னாச்சு... கா கா ஆ காவியாவுக்கு என்னாச்சு.... ?” என்றவாறே குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த டியூப்பை வெறித்தனமாக பிடுங்கி எறிந்து, நரம்பிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கும் அதே வேகத்தில் எழுந்து தன் தந்தையின் சட்டையை பிடித்து உலுக்கிறான் தினகரன்.

“ டேய் கண்ணா... பொறுடா.. டென்ஷன் ஆகாதே.. அவளுக்கு ஒன்னும் ஆகல்.. ஆப்ரேஷன் நடந்திட்டு இருக்கு. பிரச்சினை இல்ல பொழிச்சிப்பா....?”

“ என்னது பொழச்சிப்பாளா? என்னப்பா......என்ன ஆச்சு காவியாவுக்கு என்ன சொல்றீங்க.......அவ எங்க... எங்க இருக்கா நான் அவள இப்போவே பார்க்கணும்.” பதறி சிதறி துடிதுடித்து அந்த அறையை விட்டு வெளியேறிய தினகரனை பார்த்து... காவியாவின் தந்தை.. “ பெரிசா அக்கறை இருப்பது போல நடிக்கிறான் பாரு. ஒன்னுமே தெரியாதுப் போல.. தறுதலை பொறுக்கி நா..... “ என்று காவியாவின் தந்தை தன் மகள் மீதான அன்பினாலும் தன் மகளுக்கு இந்நிலை ஏற்பட்டு விட்டது என்ற ஆதங்கத்தினாலும் அப்போது அந்த சூழ்நிலையை புரிந்துக்கொள்ளாமல் தேவையற்ற வார்த்தையை விட்டுவிட்டார். கோவத்தில் இப்படி பேசுவது அவரின் இயல்பும் கூட.

அதீத பயம், கோவத்தில் இருந்த தினகரனின் வாயிலிருந்து அப்படி ஒரு பதில் வருமென்று அவனின் தந்தைகூட எதிர்பார்க்கவில்லை. அவன் காவியாவின் தந்தையை பார்த்து சொன்னது... “ யோவ்... மூடிட்டு இரு வாயை.. எதாவது இதுக்கு மேல பேசின.... “ என்று நாக்கை மடக்கி, கண்ணில் சிவப்பு ஏற எச்சரித்தான். ஆம். தினகரன் தன் நிலையில் இல்லை. அதீத ஆக்ரோஷம், கோபத்தில் அவனின் இயல்பை, குணத்தை விட்டு வேறு ஒரு ஆக்ரோஷ விலங்காக மாறுவது இதுவே முதல் முறை. காரணம் காவியா..! காவியாவின் மீதான் அன்பு , பாசம் , காதல்....!

“ சார் ஏன் சார் நிலைமை புரியமா .. ?” என்று தலையடித்துக்கொண்ட தினகரனின் தந்தை...

“ டேய் .. டேய் தினா நில்லுடா.. எங்கடா போற... நில்லு அவ ஆபரேஷன் தியேட்டர்ல இருக்கா.....” என்று சத்தமிட்டவாறே தினகரனை பின் தொடர.. இதை கவனித்த தினகரனின் சக மாணவர்கள் ஒடோடி சென்று அவனை வழிமறித்து சமாதானம் செய்ய முயலுகின்றனர்.

‘ தினா.. வெயிட்டா.. காவியாவுக்கு ஒன்னும் இல்ல. “ ஒரு மாணவன்
” தினா.. டென்ஷன் ஆகாதே டா உன் காவியாவுக்காக நாங்க பிளட் எல்லாம் கலெக்ட் பண்ணி கொடுத்துட்டோம். டோண்ட் வொரி” தீப்தி . காவியாவின் தோழி..
” தினா ,,,, தினா.. அந்த ரூம்க்கு நாம போகக்கூடாதுடா.. அங்க காவி க்கு ஆபரேஷன் நடக்குது. போயி டிஸ்டர்ப பண்ணாதே...”

தடுத்து சமாதானம் செய்த அத்துணை மாணவர்களின் கூக்குரலையும் தடுப்பையும் மீறி ஆபரேஷன் நடக்கும் அறைக்கு செல்ல முறபடும் தினகரனின் தோளில் ஒர் இரும்புக்கரம் அழுத்தியது.

“ தினகரன்.! உன்னை கைது செய்கிறோம்..” பீளமேடு காவல்துறை இன்ஸ்பெக்டர்.

தன் நிலையில் இல்லாத தினகரன். அந்த முரட்டு இரும்புகரத்தை அசால்ட்டாக விலக்கிவிட்டு.. “ எதுக்கு அரெஸ்ட் பண்ணனும் “ ? குரலில் ஒரு மாற்றம்..

“ ம்ம்ம்ம் போராட்டம் நடத்தி கவர்மெண்டுக்கு எதிரா பேசினீல... முதல்ல கிளம்பு, “ இன்ஸ்பெக்டர்

“ . வரமுடியாது. “ அழுத்தமாக சொன்னவனின் கையை பிடித்து இன்ஸ்பெக்டர்.

” தம்பி. உன்னை காலேஜ் ல இருந்து டிஸ்மிஸ் பண்ணிடாங்க தெரியும்ல ஸ்டூண்ட்ன்னு திம்ருல பேசுறீயோ.. இறையாண்மை ரூல்ஸ் படி உன்னை உள்ள தள்ளித்தான் ஆகணும் .. கோ ஆப்ரேட் பண்ணு.... இல்ல இழுத்துட்டு போக வேண்டியதா இருக்கும். “

“ வாட்.......... இறையாண்மையா.. எந்த மயி.......................மை ரூல்ஸா இருந்தாலும் என்னால இப்போ வரமுடியாது....?

பரபரக்கிறது மருத்துவமனை வளாகம்...........!!

அங்கு கூடியிருந்த சில மாணவர்கள் பதட்டம் அடைந்து தினகரனை சுற்றிவளைக்க. இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் தினகரனை பிடிக்க முற்பட..

ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் கடின முயற்சியால் காவியா மீண்டும் உயிர்பெற்றாள். நேர்கோட்டினை வரைய முயன்ற அந்த மருத்துவ மானிட்டர் வரைப்படம் மீண்டும் இயல்பாக மேலும் கீழும் காவியாவின் உயிர்த்துடிப்பை அழகாக இயல்பாக வரைந்துகொண்டிருந்தது.

“ லுக் ஸ்டூண்ட்ஸ்.. போராட்டம் நடத்தினா அத்தனை பேர்மேலயும் கேஸ் போடல. சர்ச்சையா பேசின சில பேரு மேல மட்டும்தான். இவனும் இவன்கூட வந்த அந்த பொண்ணு காவியாவும் இப்போதைக்கு அரெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் வந்திருக்கு. டிஸ்டர்ப பண்ணாம, இங்கிருக்கும் பேசண்ட்ஸ்க்கு தொந்தரவு பண்ணாம இவனை கூட்டிட்டு போக வழிவிடுங்க .இல்லன்னா நடப்பது விபரீதமா இருக்கும். “

தினகரன் ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்றவனாக... “ என்னது காவியாவை அரெஸ்ட் பண்ணுவீயா................. பண்ணிப்பாரு....... .. அவ மேல கைப்பட்டா..........................................” ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசுவதை இன்ஸ்பெக்டரால் பொறுக்க முடியவில்லை. அறைந்துவிடும் நோக்கில் கையை விசையாக ஓங்க, அந்த இரும்புகரத்தை முரட்டுத்தனமாக பிடித்து முறுக்க ஆரம்பித்தான் மிருக குணத்திலிருந்த தினகரன்.

அந்த பக்குவத்தில் இளம் கன்று பயமறியா அந்த பருவத்தில் தினகரனின் அந்த செய்கை காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டவன் அதிரடியாக அவரின் நெஞ்சில் கால் வைத்து “ உங்க காக்கி பொறுக்கிங்கதானே என் காவி.................” என்று ஏதோ சொல்ல வந்தவனை நோக்கி வந்த அவனின் தந்தை.. தினகரனை கன்னத்தில் ஓங்கி அடித்தார் “ என்ன பண்ணிட்டு இருக்க தினா..? யார் இதுன்னு தெரியும்ல. கவர்மெண்ட் சர்வண்ட். என்ன ரவுடித்தனம் பண்றீயா.. கோவம் வந்தா எது வேணும்னாலும் பண்ணுவீயா ? “

” ஆமா அப்படித்தான் பண்ணுவேன்.......... உங்களால என்ன பண்ணமுடியும்.. ?
நான் அப்படித்தான் .. நான் ரவுடிதான்... காவியாவுக்கு எதாச்சும் ஆச்சு... எவனையும் சும்மா விடமாட்டேன்....
ஆமா ஆமா நான் அடிப்பேன்.. கிழிப்பேன்.... யெஸ்.... நான் ரவுடி...........யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரவுடிப்பய நான்.........................”
பற்களை தாறுமாறாக கடித்து திமிரும் தினகரனை பார்த்து அங்கிருந்தவர்கள் மிரள ஆரம்பித்தனர்.


“ தினா.... அப்பா சொல்றேன் டா.. கண்ட்ரோல் யுவர் செஃல்ப் .. இது சரியில்ல...............” என்றாவரே அவனின் அருகில் சென்று ஆறுதலபடுத்த முயன்றும் அவன் அடங்கவில்லை. அவன் அவனாக இல்லை.

தீடிர் தாக்குதலில் நிலைதவறி கீழே விழ்ந்த இன்ஸ்பெக்டர் ஆத்திரத்திலும் அவமானத்திலும் ” கான்ஸ்டெபிள்ஸ் இவனை தூக்கிட்டு போங்க.
. ராஸ்கல் யார்கிட்ட ”

மாணவர்களின் கடும் எதிர்ப்பை வென்ற காவல்துறை பைத்தியம் நிலைக்கு சென்ற தினகரனை கைது செய்துவிட்டது.
----------------------------------------------------------------
சற்று நேரத்திற்கு பிறகு ஆபரேஷன் தியேட்டரில்.....

“ மிஸ் காவியா..... நான் பேசுவது உனக்கு கேட்குதா.....? “
” காவியா.... காவியா..கேட்குதா....” மருத்துவர்கள் காவியாவிற்கு நினைவு திரும்ப முயற்சி பண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

அரைஇமையில் விழித்த காவியாவிடம் முதன்மை மருத்துவர் முகமது ஜாபர் அவள் கன்னத்தை தட்டிக்கொண்டே ” காவியா.......இங்க பாரும்மா.. உன் பேரு காவியாதானே...........? ஞாபகம் இருக்கா உன் பேரு காவியா ? “

” தினா..... தினா............!! “ காவியா பேச ஆரம்பித்தாள்.



(தொ... ட ... ரு .. ம் )

- இரா-சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Sep-14, 5:31 am)
பார்வை : 215

மேலே