நான் அப்பிடியே ஷார்க் ஆயிட்டேன்

இன்று வெள்ளிக் கிழமை !
வழமைபோல் மஸ்ஜித்க்கு ,தொழுகைக்காக போனேன் ..
வழமைபோல் ஜல சுத்தம் செய்துவிட்டு .. ஈர முகத்துடன்
ஒரு ஓரமாக போய் உக்கார்ந்தேன் .
நிறைய பேர் வழமை போல் உபதேசங்களை செவிசாய்துக்கொண்டு இருக்கையில் எனக்கு முன்னால் மஸ்ஜிதை உல் புற இரண்டு பாகங்களாக பிரித்த கண்ணாடிகளந்த சுவர் .. நானும் தலயெய் உயர்த்தி பார்த்தேன் ... அங்கு ஒரு அறிவித்தல் போர்ட்.. அதை முகத்தில் தண்ணீர் கலந்த பார்வையுடன் படித்தேன் ... அப்பிடியே ...ஷார்க் ...ஆயிட்டேன்
அதில் ..................................
--------------------------------------------------------------------------
பேய் வருவதற்காக போடப்பட்டிருக்கும்
ரெட் காபர்ட்டில் யாரும் அமர வேண்டாம் ........
---------------------------------------------------------------------------
ஒரு திகில் பார்வையுடன் .....
முகத்தின் தண்ணிரை துடைத்துவிட்டு, நுணுக்குப் பார்வையுடன்
பார்த்தேன் ..
-----------------------------------------------------------------------------------------------
போய், வருவதற்காக போடப்பட்டிருக்கும்
ரெட் காபர்ட்டில் யாரும் அமர வேண்டாம் ........
--------------------------------------------------------------------------------
சாந்தம் அடைந்தேன் ... ஒரு அரவினால் .. அர்த்தமே ...மாறிவிடுகிறது ..பார்த்தீர்களா ??????
******************************************************
ரிப்னாஸ் - திக்குவல்லை - தென்னிலங்கை