நெஞ்சினிலே Episode 06

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 06

மறுநாள் வெள்ளி கிழமை ரவியும் அவனுடைய நண்பர்களும் பாடசாலை சென்றனர். அங்கே எல்லோரும் நடந்து முடிந்த Sport Meet பற்றி பேசி எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். வழமை போல ரவியும் ராதாவும் பேசி கொண்டனர்.
ராதா : " School முடிஞ்சி கொஞ்சம் Wait பண்ணுங்க சரியா? "
ரவி : " என்னதுகுங்க "
ராதா : " சொன்னா கேட்கணும் "
ரவி : " சரி மேடம் "
ரவிக்கு ஒன்னும் புரியவில்லை ஏன் என்று..
பாடசாலை முடிந்து எல்லோரும் சென்று கொண்டிருந்தனர் ரவி கடைசியாக வந்து கொண்டிருந்தான். ராதாவை கண்டு கொண்டான்.
ரவி : " என்னங்க? "
ராதா ஒரு சிறிய பை ஒன்றை கொடுத்தாள்.
ரவி : " என்னங்க இது? "
ராதா : " வீட்டில் போய் என்னனு பாருங்க "
ரவி : " ம்ம்ம்ம் சரி "
அப்படியே பேசிக்கொண்டே வீடுகளுக்கு சென்றனர்.
ரவி அவனுடைய Room கு சென்று திறந்து பார்த்தான் அது அழகான Gift ஒன்று அதில் I LOVE YOU என்று எழுதி இருந்தது ரவிக்கு மிகவும் சந்தோசம்..

பிறகு " இதை எப்படி வைப்பது அம்மா அப்பாவிடம் என்ன சொல்லறது " என்று யோசித்து கொண்டிருந்தான். " சரி பாப்போம் " என்று மனதுக்குள் சொல்லி கொண்டான்.
Gift ஐ அம்மாவிடம் காட்டி
ரவி : " அம்மா இது நல்லா இருக்கமா? "
அம்மா : " யாரு தந்தது இது? "
ரவி : " Friend ஒரு ஆள் தந்தது "
சொல்லி விட்டு Main Hall இல் உள்ள Cabinet இல் வைத்தான்.
அம்மா : " ரவி சாப்பிட வா " என்று அம்மா அழைத்தாள்.
அவன் போய் சாபிட்டு கொண்டிருந்தான் திடிரென
தங்கை : " அம்மா என்ன இது புது Gift ஒன்னு புதுசா இருக்கு யாரு வாங்கினது? "
அம்மா : " ஒரு பொடியன் கொடுத்ததாம் அண்ணனுக்கு " திடிரென
ரவி : " அம்மா பொடியன் இல்ல ஒரு பொண்ணு தந்தது. "
அப்படியே சாப்பிட்டு விட்டு விளையாட போய்ட்டு வரும் போது மாலை ராதா Class முடிந்து வரும் போது இருவரும் பேசி கொண்டு வந்தனர்.

மறுநாள் விடுமுறை நாள் முடிந்து
ரவி : " நாளைக்கு நான் போறன் "
ராதா : " போய்ட்டு வாரனு சொல்லுங்க "
ரவி : " ஓகே ஓகே சாரி போய்ட்டு வாறன் "
ராதா : " கவனமா போய்ட்டு வாங்க "
ரவி : " ம்ம்ம்ம்ம்ம் "
சொல்லி விட்டு சென்று விட்டான்.

தொடரும்.................

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (20-Sep-14, 3:33 am)
பார்வை : 188

மேலே