காதல் மனதில் கலந்து விடு - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் மனதில் கலந்து விடு
==========================
நிலவாய் கொஞ்சம் மாறி விடு
மண்துகளாய் நானும் ரசிக்கிறேன்
தீயாய் கொஞ்சம் மாறி விடு
விறகாய் நானும் எரிகிறேன்
முகத்தை முழுதாய் மூடி விடு
இரவில் நானும் உறங்குகிறேன்
விழியை எனக்கே கொடுத்து விடு
விண்ணில் நானும் விதைக்கிறேன்
அழுகை அடியோடு விட்டு விடு
விழிநீரை நானும் விரட்டுகிறேன்
கவிதை அனைத்தும் படித்து விடு
எழுத்தில் நானும் மிதக்கிறேன்
பசுமை அழகில் உறைந்து விடு
பறவையாய் நானும் பறக்கிறேன்
காதல் மனதில் கலந்து விடு
காதலனாய் நானும் மதிக்கிறேன்
- இராஜ்குமார்
நாள் : 26 - 5 - 2011