கரிசக் காட்டுப் பூவே---பாடல்---
![](https://eluthu.com/images/loading.gif)
பல்லவி :
உள்ளம் கொள்ளை போகுதே
உள்ளுக்குள்ள என்ன ஆனதோ?...
ஒன்னும் புரியல...
கண்கள் ஏதோ பேசுதே
காட்டு தீயும் நெஞ்சில் பரவுதே
வெளக்கம் தெரியல...
என்னவென்று கேட்க தோனுதே
வார்த்தைகளோ?... ஊமையானதே
மொழியும் சிறையுல...
ஏ கரிசக் காட்டுப் பூவே
இந்த இதயம் உன்னையே தேடுது...
உள்ளம் கொள்ளை போகுதே...
சரணம் 1 :
செம்பருத்தி பூ இதழின் ஓரம்
சிட்டெறும்பாய் வந்த நேரம்
தேன் வாசம் வீசும் போது
என் தேகம் உருகி போகும்...
கணம் என்னைக் கடந்து செல்ல
கண்கள் பேசும் இமைகள் துள்ள
காதுகள் ரெண்டும் அடைத்துப் போகும்
நெஞ்சம் மட்டும் விழித்து கேட்கும்...
நீ காட்டு வழியில் போகும் தருணம்
என் மனசும் பின்னால் போகுது...
நீ திரும்பி பார்க்கும் போதெல்லாம்
காற்றினில் கறைந்து வானில் மெதக்குது...
ஏ கரிசக் காட்டுப் பூவே
இந்த இதயம் உன்னையே தேடுது...
உள்ளம் கொள்ளை போகுதே...
சரணம் 2 :
காற்றிலாடும் பூங்கொடியாய் எந்தன்
காது மடலில் உரசுவதேன்...
சூடு பட்டால் தாங்கும் நெஞ்சை
சுத்த விட்டு மயக்குவதேன்...
உனைச் சுத்தும் இந்த நெஞ்சம்
நூலை இழந்த பட்டம் போல
உன் மனம் சொல்லும் வார்த்தை கேட்க
காற்றில் நித்தம் அலைஞ்சு திரியும்...
செங்கதிரை தேடும் தாமரையாக
உன் விழிகள் என்னைத் தேடுது...
மறைந்து நின்று நான் ரசிக்க
என்விழி இமைகள் தள்ளி நிக்குது...
ஏ கரிசக் காட்டுப் பூவே
இந்த இதயம் உன்னையே தேடுது...
உள்ளம் கொள்ளை போகுதே...