பிறந்த நாள்
வருடம் ஒருமுறை வரும் பிறந்த தினத்தின்
நினைவு தினத்தில்.
நடுயிரவு முதலே, அலைபேசி அழைப்புகள்
எதிர்பாராத நிகழ்வாய் நண்பர்களின் அணிச்சல்
பரிசு வேறு.
வானமகளும் வாழ்த்தினாள் போல
இரவு முழுவது கொட்டி தீர்த்தது
மழை.
அலைபேசி வழி வாழ்த்துக்களின் ஊடே
இன்பமாய் தூங்கி முடித்தேன்.
விடிந்தும் சில வாழ்த்துக்கள் வந்தன
எத்தனையோ வாழ்த்துக்கள் வந்தபோதிலும்
நான் எதிர்பார்த்த என் தோழியின்
அழைப்பு மட்டும் வரவேயில்லை.
நான் அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
காரணம் தேடி குழம்பி நிற்கையில்
வாழ்த்துடன் வந்தது ஓர் மின்னஞ்சல்
அதில் அழையா காரணமும் இருந்தது.
அஞ்சலால் மகிழ்ச்சி என்கிற போதிலும்
அலைபாயா கைபேசி அன்று
வழக்கத்தைவிட இடை கூடி கனத்தது.
ஏனோ என் ஆசைகள் மட்டும்
இன்றும் நிறைவேறவே இல்லை.
காத்திருக்கிறேன் அடுத்த நினைவு தினத்திலாவது
அழைப்பு வருமென்று.