மெளன இசை
இசை ஒலிக்கும் பொழுதுகளில்
மெளனம் கொள்கிறது மனம்..
இங்கே சப்தம் அதற்கு நேர்மாறான
அமைதியை அளிக்கிறது..
அது எப்படி சத்தியம் ஆகும்.
நேர்ந்தால்..
அறிவியலின் விதி
இங்கே தோற்கிறதல்லவா...
இப்படி என்னுள் விதி தேற்பதால்
நானே சொல்லிக்கொள்கிறேன்
நான்
விதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று.