என் கனவிலே காதல் பாட்டு -ராகி

இரவிலே !!!
இரவிலே !!!

வானத்தை ரசித்தேன்
நிலவாய் மிதந்தேன்
கனவிலே !!!
கனவிலே !!!
காட்டு தேனை குடித்தேன்

நிலா முட்டும் நெஞ்சம் அவள்
விழா கூட்டம் உள்ளே அவள்
கண்ணை மறைக்கும் காதல் அவள்
உள்ளே உயர உயரமாய்
வளரும் மூங்கில் தோட்டம் அவள்

காதல் மொட்டு மட்டும்
விண்ணை முட்டும்
வெண்நிலவில் பனி துளியாய்
நானும் அவளும் மட்டும் மட்டும்

தேனிலவாய் தேய்ந்தோமே
தேக உணர்வாய் உராய்ந்தோமே
வெண் நிலவின் ஒளியில்
குளிர் காய்ந்தோமே

காதல் கனவில் மூழ்கி
தீர்ந்தோமே

செல் பேசி செல்பேசி
காதலை பெற்றேனே
முன் பேசி முன் பேசி
கவிதையை வார்த்தேனே
காதலை நெஞ்சில் சுமந்தேனே

இரவிலே இரவிலே
வானத்தை ரசித்தேனே
வெண்நிலவாய் மிதந்தேனே
கனவிலே கனவிலே
காதல் தேனை ருசித்தேனே

செயற்கைக்கோள் ஒன்னு விட்டன்
சேர்ந்து வாழ கிரகம் ஒன்னு பண்ணன்
காதல உயிர் முளைக்க விட்டன்
கிருக்கன் கிருக்கனா திரிஞ்சன்
பொறுக்க பொறுக்க காதல் பொறக்கும் தான் செஞ்சன்

இரவிலே இரவிலே
கனவிலே கனவிலே
வாழ்ந்தேன்

பௌர்ணமி பளிங்காய்
ஆடியில் அசையா
அம்மாவசை கல்லாய்
பெண்ணே உன் கருவிழியில்
காதல் கண் விழியாய்
என் பெண் மதியே

இரவு வானவில்லாய் வாழ்கிறாய்
கனவு ஏழு வண்ணமாய் மிளிர்கிறாய்
கனவிலே காதல் தேன் தருகிறாய்
நினைவிலே வான் மொழியாய்
வசந்த பூ மழையாய்
காதல் பூ பூக்க
உயிர் நீர் வீச
நீ வாராயோ

இரவிலே கனவிலே
ரசிக்கிறேன் மிதக்கிறேன்

எழுதியவர் : கிருஷ்னா (20-Sep-14, 3:12 pm)
பார்வை : 214

மேலே