மறுத்து விட்டேன் ---அவள் வார்த்தையை

தேடி அலைந்து களைத்து விட்டேன்
தோல்வி கண்டு துவண்டு விட்டேன்
கண்கள் காட்டும் திசையிலே
காலடி எடுத்து வைக்கிறேன்
காணவில்லை -----
பார்த்துப் பழகிய அவள் முகம்
சொல்லிவிட்டாள் அவள் -என்னை
மறந்துவிடு என்று .....
சொல்கிறது மனம் -அவளை
மறக்க மாட்டேன் என்று .......
சோர்ந்துவிட்டேன்-அவளின்
சொற்களில் .......
சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது சூரியன் -அவளோ
சுட்டெரித்துவிட்டாள்
தன் சொல்லால்
மறுத்ததில்லை -அவளின்
வார்த்தைகளை --------
மறந்துவிடு--சொல்லிவிட்டாள்
முதல் முறையாக மறுக்கிறேன்
அவள் இதழ் ஒலியை........

எழுதியவர் : ஜேம்ஸ் (20-Sep-14, 3:33 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
பார்வை : 84

மேலே