வாழ்க ராவணா

.......வாழ்க ராவணா ..... நீ வாழ்க.....

ராவணன் எனும் பெயரை மாற்றினாய் - நீ
ரகரத்திலே வேறொரு பெயர் இயற்றினாய்
பத்து தலைகளை மறைத்தாய் - நீ
பல தலைகளை கொய்து சிரித்தாய்

திரேதா யுகத்தில் தொலைந்தவனே - மீண்டும்
கலி யுகத்தில் பிறந்தவனே
மீனின் இரத்தம் குடிப்பவனே
மின்னல்களுக்கு இடையில் சிரிப்பவனே

கல்கி பூமி வரவேண்டும்
அந்த தீர்ப்பு நாளும் வரவேண்டும்
அவரும் உயிர்த்தெழுதல் வேண்டும்
உனதாட்சி கண்டு மகிழ்தல் வேண்டும்

அன்று பெண்ணாசை பிடித்தழிந்தாய்
இன்று மண்ணாசை பிடித்தலைகிறாய்
இரண்டிற்கும் முடிவு ஒன்றுதான்
என்பதை என்றுதான் அறிய போகிறாய்

உன்னினம் சிரித்து மகிழ்ந்திட
என்னினம் எரித்து மகிழ்கிறாய்
எல்லாரும் ஓரினம் என்பதை
என்றுதான் அறிய போகிறாய்

யதா யதாகி என்றவனும்
யாழின் பக்கம் திரும்பவில்லை..
படைத்தவனாகி இருபவனும்
படைகள் ஒன்றும் அனுப்பவில்லை..
கடும் மழை பொழிவிப்பவனும்
கடல் கடந்து வரவில்லை..

ஊரில் பிறக்க கூடாதென்று
கரு தடைகள் பல செய்கிறாய்
இராமன் உன் ஊரில் பிறக்கவில்லை
என்பதை என்றுதான் உணரப்போகிறாய்

.......வாழ்க ராவணா ...அதுவரை.. ..நீ வாழ்க.....

எழுதியவர் : ச.ஷர்மா (22-Sep-14, 11:08 am)
பார்வை : 111

மேலே