நிர்வாணம் அழகா அசிங்கமா-வித்யா

நிர்வாணம் அழகா.? அசிங்கமா.?-வித்யா

முச்சந்தியில்
அவள் நிர்வாணம்
அசிங்கமென
முகம் சுளிக்கவைக்கும்.....!!

முட்டுச்சந்தில்
அவன் கண்களே
உடைகளைந்து
நிர்வாணம் தேடும்.....!!

மெய்ஞானம் பேசி
விஞ்ஞானம் பேணி
தன்னிலை மறக்கும்
கதைப் புத்தகத்திற்குள்
நீலப் படமொன்று
கைக்கொட்டிச்சிரிக்கும்....!!

வேலைக்காரி உடை விலகும்
பேருந்திலொருத்தி இடைத் தெரியும்
அலுவலகத்திலொருத்தி கை உரசும்
பாழாய்ப் போனவன் மனம்
காமப்பால் குடிக்கும்.......!!

வெள்ளையும் சொள்ளையுமாய்
உடையுடுத்தி.....
பொல்லாத பெண்ணியம் பேசி
சல்லடைக் கண்களில்
அங்கங்களை சலித்தெடுக்கும்
மோகப் பன்றிகளின் சொற்பொழிவு
பெண்விடுதலைப்பற்றி.....!

இதம் பதம்தாண்டி
சூடேறி சூடேறி
அழுத்தம் பெருத்து
பாறைக்குழம்பு கக்கும் நேரமொன்றில்
வைத்திருக்கவேண்டுமிந்த பட்டிமன்றம்........!!

"நிர்வாணம் அழகா.? அசிங்கமாவென்று?"

நிர்வாணம் வெறுத்த
துறவிகளே.......
சொல்லுங்களேன்....
நிர்வாணம் அசிங்கமென்று......!!

நிர்வாணம் ரசித்து
உடைகளைத்துறந்த வேசிகளே
சொல்லுங்களேன்.....
நிர்வாணம் அழகென்று......!!

-அப்போது நிர்வாணம் அர்த்தப்படும்......!!

இந்த ஆன்மாவிற்கு
உடம்பே ஒரு சட்டைதான்
எனும் மெய்ஞானம்
இன்னும் எந்த ஞானியும்
காணவில்லை....!!

எழுதியவர் : வித்யா (23-Sep-14, 12:05 am)
பார்வை : 206

மேலே