பிறர் நலம்

பாண்டவர்கள் ஒரு முறை
உண்ணும் வேளையில்
வலது கை கொண்டு
உண்ணக் கூடாதென்ற
புது விதியால்
தடுமாறி நில்லாமல்
அனைவருமே நன்கு
புசித்திட்டார் .. பசியும் நீங்க!
தன் கையால் எடுத்தஉணவை
தான் புசிக்கும் வழி நீக்கி
பிறிதொருவர் பசி நீக்கும்
வகையினாலே ..
அரும் பசியை
அறிவினாலே ஜெயித்தனரே !
மானிடர்கள் மற்றவர்க்கு
வேண்டியதை செய்திடுங்கால்
உமக்கு வேண்டியது
வந்து சேரும் ..என்றோ ஓர் நாள்!