சாமியோவ்

குன்றெல்லா எங்க ஊரு சாமியோவ்
குறு மலையெல்லா எங்க ஊரு சாமியோவ்
தேனுந்தினையும், கிழங்கும் எங்க உணவு சாமியோவ்
காடெல்லாம் எங்க சொந்தம் சாமியோவ்

சந்தனம் அகிலெடுத்து சாமியோவ்
நாட்டுக்குள்ள வித்துவந்தோம் சாமியோவ்
குமரன் அருளால சாமியோவ்
குறி சொல்லி பொழைச்சு வந்தோம் சாமியோவ்

காடுதான் எங்க ஊடு சாமியோவ்
இப்ப காடெல்லாம் கவர்மெண்டு சொத்தாச்சு சாமியோவ்
காட்டைவிட்டு தொரத்திபுட்டாங்க சாமியோவ்
கண்ணைகட்டி காட்டுல விட்டமாரின்னு கேட்டுருக்கோம் சாமியோவ்
நாட்டுக்குள்ள வந்த எங்க கண்ணுதான் கட்டினமாரி இருக்கு சாமியோவ்

வீதி எங்க வீடாச்சு சாமியோவ்
கவர்மெண்டு கட்டி குடுத்த ஊடும்
எங்க கூட்டத்துக்கு பத்தல்ல சாமியோவ்
காட்டுல ராசாவா இருந்தோ சாமியோவ்
நாட்டுக்குள்ள தெருவுல நிக்கறோம் சாமியோவ்

அருவில ஆடி மானோட, மந்தியோட
மயிலோட விளையாடி திரிஞ்சோம் சாமியோவ்
குறிசொன்ன நாங்க எதிர்காலம் தெரியாம
முழி பிதுங்கி நிக்கிறோம் சாமியோவ்.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (23-Sep-14, 9:49 am)
பார்வை : 80

மேலே