என்றுமே நாமாக--- அரவிந்த் C

எனக்காக பிறந்தவள் நீ....
உனக்காக உதித்தவன் நான்...

நமக்குள்
பிரிவுகளும் கிடையாது
பிரிவினைகளும் கிடையாது...

புதைந்து நிறைந்த
பாசம் மட்டும்
பசுமையாய் துளிர் விடும்....

இதயதுடிப்புகள் இணைந்திட
கண் இமைக்கும் நேரம் குறைந்திட
குழந்தைகளாய் நாம்....

கொஞ்சி பேசும் உன் மொழி
கெஞ்சி கேட்குதே என் செவி...

என்னை தீண்டி தேயுது
உன் ரேகை,
அதை தேடி துடங்குது
என் தேடல்...

ஊடல்கள் காதல்கள் இரண்டிற்கும்
வஞ்சகம் இல்லையடி
நம் உள்ளே...

வெகு நேர சண்டைகள்...
சில நேர கொஞ்சல்கள்...
பல நேர மௌனங்கள்...
என கழிந்தது காலங்கள்,....

காதலனாய்
பதவி உயர்வு பெற்று
ஆகிறது பல ஆண்டுகள்...

கணவனாய் நான்
மீண்டும் உயர்ந்திட
ஒரு மனு உன்னிடம்...

இனி கடக்கும் காலங்கள்
கைகோர்த்து கடந்திடுவோம்
இனி நினைக்கும் நிமிடங்கள்
இணைந்தே மகிழ்ந்திடுவோம்....

உன் கணவனாக நான்
என் மனைவியாக நீ
என்று மரணம் வென்று வாழ்ந்திடுவோம்...

எழுதியவர் : காதல் (23-Sep-14, 7:30 pm)
பார்வை : 101

மேலே