மனிதன் வாழ்ந்தான்
ஆள்பவர்க்கு லெபனான் ,ஈரான் , ருஷியா
எதிர்ப்பவர்க்கு அமெரிக்கா , பிரான்ஸ்,பிரிட்டன்
பல லட்சம் உயிர்கள் மண்ணோடு மண்ணாகி
எஞ்சிய கோடி பேர்கள் மண்ணை விட்டு ஓடி...
சிரியாவில் போர் முடியும்.
கொரியாவிலும் முடியும் .
சிரிலங்காவிலும் முடியும்.
இந்த கிளையில் ஆயுதங்கள் விற்று , பணம் , பிணம் ரெண்டும் தின்று முடிப்பர் நாட்டாமைகள்.
அடுத்து இன்னொரு கிளையிலும் admin manager க்கும் operations manager க்கும் சண்டை நடக்கும் .
அங்கு போவோம் என பஞ்சாயத்துக் காரர்கள் போவார்கள்.
அதுவரை நாம் சண்டை போட்டுக் கொண்டு அவன் வரும்போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்போம்.
பாரத் மாதாகி ஜே.!. பாகிஸ்தான் ஜிந்தாபாத்.!
இந்தியாவும் , பாகிஸ்தானும் 40% மேல் தங்கள் பாதுகாப்புக்கு செலவு செய்கின்றனர் .
சண்டை போடாமல் இருந்தால் இது தேவை இல்லை .
என்ன சண்டை.??. பொல்லாத மத சண்டை .வேறு எதுவும் கிடையாது .
இந்த மத சண்டையில் ஒரு துளி லாபம் கூட இவர்களுக்கு இல்லை .
நஷ்டம்தான் !!.
உயிர் , மானம் , பணம் , நேரம் இன்னும் எவ்வளவோ .!! எவ்வளவோ .!!
இந்து எனப் பிறந்த என்னின் மூன்றாவது , நான்காவது தலைமுறை இஸ்லாம் ஆகக்கூடும் .
இஸ்லாம் எனப் பிறந்த என் நண்பனின் தலைமுறைகளும் இந்துவாகக் கூடும் .
என் தலைமுறைகள் என்னைக் கொலைமுறைகள் கற்றுத்தந்தவன் என என் சரித்திரம் எழுதும்.!.
என் கல்லறைகளை அந்த நாகரீக சமுதாயம் புதிதாய் கண்டுபிடித்த இயந்திரம் ஒன்றால் இமைக்கும் நேரத்தில் இடித்துவிட்டுச் செல்லும் .!
நினைக்கவே கூசுகிறது.!!
சரி ...
இன்று
உங்கள் சம்பளம் 10000 ருபாய் என்றால் நீங்கள் 4000 ரூபாய்க்கு ஒரு செக்யூரிட்டி வைத்துக் கொள்வீர்களா?
இந்த இரு நாடுகளும் அதைதான் செய்கின்றன .
இப்போது சொல்லுங்கள் .
சண்டை போடலாமா ???
ஹாப்பி தசரா & பக்ரித் முபாரக் ... ஒருவருக்கொருவர் வாழ்த்துவோம்.!
இந்து முஸ்லிம் வீரங்களை துர்கா பூஜையன்று நினவு கூறுவோம்.!!
அவர்களின் தியாகங்களை பக்ரித் அன்று போற்றுவோம்.!!
மனிதன் வாழ்த்தான் என்று வரலாறு பக்கம் பக்கமாக எழுதும்.
ஏனெனில் வரலாறு மதத்தை முதல் பக்கத்தில் மட்டும் எழுதி விட்டு அதன் பக்கமே போவதில்லை.