பயத்தை கொல் மனிதா

.................பயத்தை கொல் மனிதா.............


அந் நேரத்தில் பயம் எனும்
பெரும் தீ இவ் இளம் உயிரை
ஆட்கொள்ளாமல் இருந்திருந்தால்..

ஒரு வேளை
ஒரு கையோ இல்லை
ஒரு காலோ மட்டும்தான்
களைந்திருக்கலாம்
உயிர் உடம்பினுள்
உறைந்திருக்கலாம்..

தோல்வியோ வெற்றியோ
ஆபத்து வரும்போது

எந்த உயிரும் முதலில் துணிந்து பலத்தை காட்டும்
ஆனால்
மனிதன் மட்டுமே பணிந்து பயத்தை காட்டுவான்

இதை சொல்லும் நானும்
அந் நேரத்தில் பயத்திற்கு
அடிமை வேலை செய்து கொண்டு தான்
இருந்திருப்பேன் ...

அது தான் மனித மனத்தின் இயல்பு..

அதனால் தான் மனிதா
நீ உன் பயத்தை கொல்
வாழ்வதற்க்கு துணிந்து நில்

வாழ்வின் சின்ன சின்ன
பயங்களை நீ வென்றால்
இது போன்ற பெரும் பயத்தை
எதிர்க்கும் துணிவு உன்னுள் பிறக்கும்

பயந்து இறந்தான் என்பதை விட
பலனின்றி இறந்தான் என்று இருக்கட்டும்

பக்கத்தில் இருக்கும் பாவிகளுக்கு
படம் எடுத்து பரப்பத்தான் தெரியும்

உன் வாழ்க்கை உன் கையால் தான் நிறையும்

பயத்தை கொல் மனிதா
துணிந்து நில் மனிதா..


( இந் நேரத்தில் உடல் துறந்த அந்த இளம் உயிர்
உன்னத உயரத்தில் சாந்தி அடைய பிரார்த்திப்போம்)

எழுதியவர் : ச.ஷர்மா (25-Sep-14, 10:44 am)
பார்வை : 90

மேலே