பாதைகள் புதிது பயணங்கள் இனிது
பாதைகளே....
எங்கு செல்கிறீர்கள்?
உங்களுக்கு தெரியுமா
நாங்கள் உங்களில்
பயணிக்கிறோம் என்பது...?
நல்லவனோ,கெட்டவனோ
உங்கள் மடியில் சுமந்து
செல்ல வேண்டிய இடத்திற்கு
வழிகாட்டி கொடுக்கிறீர்கள்.....
உங்களுக்கு சம்பளம்
யார் தருவது?
ஓஹோ... புரிகிறது
ஊதியம் இல்லாத
உத்தியோகமா?
உங்கள் சாலையோர
பூக்கள் பேசிக்கொள்கின்றன
"பாரடி இவன் இனிமையான
பயனங்களிக்கு வழிகாட்டுகிறானாம்
ஊதியம் இல்லாத உத்தியோகமாம்"
பாதைகளே
உண்மையில் நீங்கள்
வழிகாட்டிகள்தான்
என்ன புரியவில்லையா?
சொல்கிறேன் கேளுங்கள்...
பாதைகளே.....
எத்தனை பெரிய
சுமைகள் வந்தாலும்
நீங்கள் அசைவதில்லை - இது
மன உறுதியை
கற்றித்தருகிறது.....
பாதைகளே.....
நீங்கள் ஜாதி,மதம்
பார்த்து வழிக்காட்டுவதில்லை - இது
சமநோக்கை கற்றுத்தருகிறது...
பாதைகளே....
சா ஊர்வலமோ...!
திருமண ஊர்வலமோ.....!
உங்கள் மடியில் சுமக்கிறீர்கள்
இது வாழ்க்கையின்
இன்ப,துன்பத்தின்
சகஜத்தை கற்றுத்தருகிறது
பாதைகளே.....
நீங்கள் கற்களையும்,முட்களையும்
கூட சுமக்கிறீர்கள் - இது
வாழ்க்கை போட்டி பொறாமையில்
நிறைந்தது என
கற்றுத்தருகிறது....
பாதைகளே...
சில சமையங்களில்
நீங்கள் தேய்ந்துவிடுவதுமுண்டு
இது அயரா உழைப்பை
கற்றுத்தருகிறது.....
பாதைகளே.....
சில நேரங்களில் நீங்கள்
சரிந்து விழுவதுமுண்டு
இது வாழ்க்கையில்
அதீத துன்பம் எம்மை
சரிக்கும் என்பதை
கற்றுத்தருகிறது....
பாதைகளே....
உங்களை செப்பனிட்டு
தார் ஊற்றி அழகக்கினாலும்
மீண்டும் உங்களது
கடமையைத்தான்
எவ்வித அலட்டலுமின்றி
செய்கிறீர்கள்....
இது வாழ்க்கையில் நாம்
எவ்வளவு பட்டைத்தீட்டப்பட்டு
உயர்ந்தாலும் எமது
கடமைகளை மறக்காமல்
செவ்வனே செய்ய வேண்டும்
என்பதை கற்றுத்தருகிறது.....
பாதைகளே....
இப்போது புரிகிறதா?
பிறருக்காக உழைத்து
வாழ்நாளை கழித்து
வாழ்க்கையை கற்றுத்தரும்
நீங்களும் ஒரு
வழிகாட்டிதான் என்பது....
யதார்த்த வாழ்க்கையின்
பாதைகள் புதிது
பயணங்கள் இனிது.......!!!