முதிர் கன்னி

மாலையில்
இருந்த மொட்டு
பனித் துளி கரம்
பட்டு பருவம்
அடைந்து
காலையில்
ஊற்றிய நீரில்
தலைக் குளித்து
கதிரவனின் கண்
பார்வையில்
வெட்கப்பட்டு
கருவண்டோடு
காதல் புரிந்து
சிரித்த முகத்துடன்
அழகு காட்டி
பொங்கிவரும்
பால் நுரையாக
இன்பத்தோடு
இருக்கின்றது
அவள் வைத்த
மல்லிகைச்
செடி முற்றத்திலே...!!!

பல ஆசைகளை
சுமந்து பல கனவு
கண்டு கொஞ்சம்
கொஞ்சமாக
கற்பனை வளர்த்து
தானும் வளர்ந்து
மழலைப் பருவம்
மாறி மங்கைப்
பருவம் அடைந்த
நாள்முதல் இன்பம்
என்னும் சொல்லுக்கே
அர்த்தம் புரியாமல்
வாடுகின்றாள் அவள்
வீட்டுக்குள்ளே....!!!!

வரதட்சணை
என்னும் நோயால்
பாதிக்கப்பட்ட
மாப்பிள்ளை
வீட்டார் மருத்துவம்
செய்ய வழியில்லா
பெண் வீட்டார்
பொறுமை இழந்த
வயது கூடிக்
கொண்டே வருகின்றது...!!!!

இளமை இழந்து
ஏக்கத்தோடு
வாழ்க்கையின்
பிடியில் புதுமைப்
பெயரால் முதிர்
கன்னி என்னும்
பதவி ஊரார் வாயில்...!!!

அக்கறை இல்லாத்
தகப்பன் போதையின்
மடியில் பாசமான
தாய் தினமும்
கண்ணீரின்
பிடியில் அவளின்
கவலையோ வெளியே
போவதோ கவிதையின்
வடிவில்....!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (25-Sep-14, 12:41 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 197

மேலே