வாசகர் கவிதை
கருவறை இருட்டில்,
விழி விரித்தே நெடும்வெளி பார்த்து ,
வழி நடந்திருப்பான்!
கால் தடுத்தே கண்டிருப்பான் அவளை.
வெற்றுடல் வைத்தே விசிர்பிடித்து,
நிர்வாணியாய் நகைத்துக்கொண்டிருந்தாள்!
காலவோட்டங்கள் வரைந்த வரிகள்
பூசியவளாய் கிழவி தன்
ஓசையில்லா ஒப்பாரிப் பாடிக்கொண்டிருந்தாள்!
இருவரும் இடும் கோசனையோ,
காதில் விழுந்ததாய் அவன் உணரவில்லை!
ஏதோவொரு கல்லறை மனிதன்,
அசைவில்லா ஓருடலை புணர்கிறான்!
வெளி எல்லாம் நிர்வாணமாய்,
சடலங்கள் சிதறிக்கிடந்தன!
மனிதவர்ணம் அங்கே
அபத்தமாய் தெரிந்தன!
அபயமாய் போயின!
நடைப்புள்ளி ஒவ்வொன்றாய்
புதைக்குழியாய் மாறியே,
புதையுண்டு வருகின்றன!
உறக்கமும்,விழிப்பும் கலந்தே,
இருட்டினை விடியலாக்கினான்!
ஏதும் தணிக்கை செய்யப்படாமல்
எழுத்தின் மார்க்கமாய் தூலிக் கொண்டே,
சுகிக்கலானான் அவன்!
கனவினை தன் மொழியினால்
பேசத் தொடங்கினான்.
கனவின் காரணி கண்டிலாதவனாய்,
'கனவிடம் தோற்றே துயில் கொண்டான்'
என்றேத் தொடங்கினான்!
தன் மொழியும்,எழுத்தும்
அநர்த்திமிக்க கனவிடம் தோற்பதா?
என்றெண்ணி கோடிட்டுவிட்டான்
தன் முதல்வரியை!
சரிதான்.
எழுத்தும்,மொழியும் தோற்ற பின்னே,
அவனான உலகம்
இங்கே களவாடப்படும்!
களத்தினை கண்டவன்,
கதை காணமுடியில்லை?
வெட்கம் சற்றே அவனை
வேட்டையாடி இருக்கக்கூடும்!
கனவோ-உலகின் அழிவாய்
எழுதத் தொடங்கியேத்
தோற்றுப்போனான்!
தன் முதல் படைப்பின் மூலம்
அழிவை நிகழ்த்த தோன்றாமல்,
அவன் தூலிகை காற்றில்
துவண்டுக்கொண்டிருந்தது!
இந்த தற்காலித் தோல்வியானது,
நிஜவுலகில் அவனைத் தொலைத்திருக்கும்!
கனவுகள்,
மனித உணர்வுகளை
உள்ளடக்கி வைத்திருக்கும்,
சமூகபிம்பத்தின் சாபமாய்த் தோன்றியது!
படைப்பாளியை மிகுந்த திரனாளியாய்,
பார்க்கும் வாசகனை
படைப்பாளியாய் முன்னிறுத்த எண்ணியோ,
வெறும் தாளினை
கவிதையாய் விட்டுச்சென்றான்!
மெல்லியதோர் தென்றல்,
அந்த வெறும் தாளினை
வாசகனிடம் சேர்த்தது!
அவன் கனவினுள் வழியே!
----இப்படிக்கு வாசகன்.
பாரி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
