நாகரிக மோகன்கள்
நாகரிக மோகன்கள்
ஒரு காதில் வளையமோ
ஒளிர்ந்திடும் கடுக்கணோ
அணிந்திருப்பார் பெருமையுடன்
மறுகாதுக்(கு) எப்போது
மரியாதை செய்வாரோ?
மகளிரைப்போல் மூக்கிலும்
அணிகலனை எந்நாளில்
அணிந்திடப் போவாரோ?
போட்டியென்று வந்துவிட்டால்
பால்வேறுபாடு எல்லாம்
பறந்தோடிப் போய்விடுமே
அந்நாளை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருப்போம்.
---------------
Mohan = 'to attract' or 'to infatuate’