18 வயதை பூர்த்தி செய்யும் என் தோழிக்கான வாழ்த்துக் கவிதை
உன் வயது பதினெட்டு......
நீ ஒரு இளம் மொட்டு .........
மனதை பறிக்கும்
பருவச்சிட்டு ........
உன் ஆர்வம் தொட்டு
வியக்கிறேன் பல
கேள்விக் கனைகளிட்டு ...
உன் கவிகளோ தேன் சொட்டு .....
பருகுகிறேன் சொட்டுச்சொட்டு ......
வாழ்க வளமோடு
வண்ணமிட்டு
வானவில் வர்ணத்தில்
கோலமிட்டு
எழுத்திலே ...பல காலம் தொட்டு
படைப்பில் நீந்தினாய்
கவித் தாளமிட்டு
வளரட்டும் கலை வளம்
சிகரம் தொட்டு
சகாயனாய் நான் இருப்பேன்...
வாழ்த்துக்களை இட்டு
வெற்றி நடை போடவேண்டும்
தமிழ் நேசம் தொட்டு ......
எதிர்கால வாழ்வே !
ஜொலிக்க வேண்டும் ....
நிறைவான ஆசைகள்
நிறைவு பெற்று ....
----------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் அஹமட் - தென்னிலங்கை.