பேசும் வகை

மௌனமது மொழியாகி மண்ணில் வாழும்
மனம்நிறை மனிதராகி பண்ணில் பாடும்
புகழ்தனை அடைவார் எண்ணில் ஏற்றம்
எதிர்வரும் வகையாய் வாழ்ந்திடு வாரே!

சிற்சில சமயங்கூட மற்றவர் மனமதனை
முட்களால் கீறும்வகை பேசுகின்ற குணமதனை
விட்டொழித்து வாழுகின்ற சேயென ஆகிடவே
பற்பலவாய் ஆனந்தம் அடைவோமே நானிலத்தே!

எழுதியவர் : karuna (26-Sep-14, 12:19 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 130

மேலே