மகாத்மாவின் மனசாட்சி

தீயதைக் கேட்க மாட்டோமென்று
இரண்டு காதுகளை மூடிக் கொண்டு
ஒரு குரங்கு....
தீயதைப் பார்க்க மாட்டோமென்று
இரண்டு கண்களை மூடிக் கொண்டு
ஒரு குரங்கு....
தீயதைப் பேச மாட்டோமென்று
வாயை மூடிக் கொண்டு
ஒரு குரங்கு....
.
.
.
.
.
இந்த குரங்குகளுக்குப் பதில்
மனிதர்களை எடுத்துக்காட்டாக வைக்க
மகாத்மாவிற்கு மனசில்லை...
ஏனெனில்
அவை உண்மையில் குரங்குகள் அல்ல
குரங்கு மனிதர்கள்...
நாம் உண்மையில் மனிதர்கள் அல்ல
மனித குரங்குகள்....
பின் குறிப்பு: டெல்லி சம்பவத்துக்காக எழுதியது....(விலங்கு மனிதனை கொன்றதற்காக...),