என்னை எனக்கும் பிடிக்கவில்லை - இராஜ்குமார்
என்னை எனக்கும் பிடிக்கவில்லை
=================================
வானவில்லை ஏனோ
பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்கா -சில
நிறமதில் சிரிப்பதால் ..!
செயற்கை சற்று
பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த - பல
இயற்கையழகை எதிர்ப்பதால் ..!
கடலலை வீச்சு
பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்கா - அந்த
உப்புகாற்றை சுமப்பதால் ..!
மழைத்துளி துள்ளல்
பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த - இந்த
சன்னலை நனைப்பதால் ..!
என்னை எனக்கும்
பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்கா - உருகிய
காதலில் நானுமிருப்பதால் ..!!
- இராஜ்குமார்
நாள் : 31 - 8 - 2011

