சமாதாண நிலாவே

முகில்களில்
முலாம் தடவி
முகம் துடைப்பேன்
நிலாவே...
நீ!
உலகப்பந்து நோக்கி
ஓடி வா!

செவ்வானம்
கவ்விய உலகம்
தெருவெல்லாம் மனித சடலம்
வாழ் நாள் முழுவதும்
மரண அவலமும்
மயானச் சந்தைகளும்!

வறுமையும்
வெறுமையும்
உலக மக்களை
அறுத்து குவிப்பது போதாமல்
போரும் சேர்ந்து
வேர் அறுத்து
விளையாடுகிறது!

தென்றல் காற்று
தேகம் தழுவ வேண்டும்
தென்னங்கீற்றுக்கள்
கீதம் இசைக்க வேண்டும்

உலக மக்களெல்லோரும்
மனித உறவாட வேண்டும்
நிலாவே....
நீ!
ஓடி வா!!
உலகப்பந்து
ஒற்றுமையில் சுழலட்டும்
முகிலில்
முலாம் தடவி
உன் முகம் துடைப்பேன்

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (27-Sep-14, 10:48 pm)
பார்வை : 68

மேலே