ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 05 - சந்தோஷ்
தொடர்ச்சி :05
---------------------
“ மிஸ். காவியா. உங்கள அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் ” காக்கிகள் காவியாவிற்கு முன்.
“ஏன் மேடம். ஏன் என் பொண்ணை அரெஸ்ட் பண்ணுறீங்க.? காரணம் என்ன ? அந்த பையனை தான் கூட்டிட்டு போயிட்டீங்களே..? காவியாவின் தந்தை பதற்றமடைந்து..
“ கலவரம் தூண்டுற வகையில பேசினது , நாட்டு இறையாண்மைக்கு எதிரான பேசினது. பிரதமர் பெயருக்கு களங்கம் எல்லாம் சேர்ந்து “பொடா” சட்டத்தில் கைது செய்கிறோம். அந்த தினகரனும் உங்க பொண்ணும் தான் போராட்டம் கலவரமா ஆனதற்கு முக்கிய காரணம் ” காவல்துறை மகளிர் இன்ஸ்பெக்டர் இந்துமதி.
“என்னது தினகரனை அரெஸ்ட் பண்ணிட்டீங்களா.?
எதுக்கு என்ன காரணம் ..? இப்போ அவன் எங்க இருக்கிறான். அவனுக்கு ஆல்ரெடி ஸ்ட்ரெஸ் ப்ராப்ளம். ?
அய்யோ தாங்கமாட்டானே.?
ஏன் டாடி .. என்கிட்ட எல்லாம் மறைச்சீங்க. ச்சே ஸ்லெல்பிஸாவே இருக்கீங்க “ காவியா கண்களில் கண்ணீர் அலைகள்.
“இல்ல காவியா.. அது வந்து .. வந்து உனக்கும் உடம்பு முடியல. டாக்டர் சொல்ல வேண்டா......” காவியாவின் தந்தை சொல்லிமுடிப்பதற்குள், இன்ஸ்பெக்டர் இந்துமதி குறுக்கீட்டு ..
“மிஸ்.காவியா. வாங்க போகலாம். நேரம் இல்ல. கோர்ட்ல உங்கள சாயங்காலத்துக்குள்ள ஒப்படைக்கனும். லேடீஸ்யை போலீஸ் ஸ்டேஷன்ல நைட் புல்லா வச்சிருக்க ரூல்ஸ் இல்ல”
“என்ன மேடம் பெரிய ரூல்ஸ். இப்போ தான் நான் ஒரு பொண்ணுன்னு தெரியுதா. ?அன்னிக்கு என்னை அடிக்கும் போது... எங்க போச்சு உங்க ரூல்ஸ் அவனவன் போராட்டம் போராட்டம்ன்னு சொல்லி பஸ்ஸை கொளுத்துறான், கடைகளை அடிச்சு நொறுக்குறான், பப்ளிக்கு டிஸ்டர்ப் பண்ணுறான். அவனுககிட்டலாம் உங்க பொடா ஆக்ட்லாம் செல்லாது. எதோ எங்களுக்கு தெரிஞ்ச கருத்துகளை ஆக்ரோஷமா பேசினா ரோஷமா சட்டம் பேசிட்டு வர்றீங்க. சரி சரி.. வாங்க போகலாம். அப்படி என்னதான் பெரிசா எங்கள புடுங்கி கிழிக்கிறீங்கன்னு பார்க்குகிறேன்.
டாடி.... டென்ஷன் ஆகாம இருங்க. மம்மிக்கு பிபி இருக்கு கவனமா பார்த்துக்கோங்க. கோர்ட்ல வந்து பாருங்க. சரியா. “ புதியதாக பக்குவமடைந்தவளாக மாறிய தன் மகளின் பேச்சை கண் கொட்டாமல் பார்த்து ஆச்சரியப்பட்டாலும் தன் மகள் கைது செய்யப்படுவதை ஒரு தந்தையாக அவரால் ஜீரணிக்க முடியவில்லை காவியாவின் தந்தைக்கு.
”போலீஸ் மேடம் எம் பொண்ணை நானே ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரேன் மேடம். “
“சாரிங்க சார், முடியாது அக்கியூஸ்ட்ன்னு வந்தா போலீஸ் வாகனம்தான். .. ,ம்ம்ம் வாம்மா.... கிளம்பு.”
---------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை நீதிமன்றம் :
காவியா நீதிபதிக்கு முன் ஆஜர்ப்படுத்தப்படுகிறாள். பல பல சட்ட சம்பிரதாயங்களுக்கு பிறகு கோவை மத்திய சிறையில் காவியா 15 நாட்கள் இருக்க வேண்டும் என்று உத்தவிரவிட்ட நீதிபதியை பார்த்து காவியா “ சார் . என் ப்ரெண்ட் தினகரன் இப்போ எங்க இருக்கிறான். இதே கேஸ்ல அவனையும் நேற்று பிடிச்சிட்டு போயிட்டாங்களாம். கேட்டா யாருகிட்டயும் பதில் வரல. ப்ளீஸ் எனக்கு அவனை பற்றிய இன்பர்மேஷன் மட்டுமாவது தெரியனும். எதாவது பண்ணுங்க சார். “ மிகவும் பணிவாக. ஓரு அப்பாவிதனமாக நீதிபதியிடம் காவியா முறையிட, நீதிபதி காவல்துறையினரிடம் கேட்டறிந்து பின்பு...
“ உன் ப்ரெண்ட் பத்திரமா இருக்கான் மா. அவனும் மத்திய சிறையில தான் இருக்கான். நீ போறது மகளிர் சிறை. ” நீதிபதி
“ சார். உங்ககிட்ட வேற எதுவும் கேட்கல். என் தினாவை... சாரி தினகரனை நான் இப்போ இப்போ இப்போவே பார்க்கனும் சார். பார்க்கமுடியாதுன்னு சொல்லி என்னை ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்க. ப்ளீஸ் அங்கிள்...” காவியா மிக உருக்கமாக கேட்டதை நீதிபதிக்கு சற்று மனசாட்சி சட்டத்தை மீறி வேலை செய்தது.
“ ஒகே. இன்னும் கொஞ்ச நேரத்தில பார்க்கலாம். ஒன்லி 10 மினிட்ஸ் தான். சின்னபசங்க. ஸ்டூண்ட்ஸ்னால நானே எனக்கு இருக்கிற அதிகாரத்துல ஸ்பெஷல் பர்மிஷன் தரேன் மிஸ் காவியா. மிஸ் யூஸ் பண்ணிடாதீங்க. பண்ணமாட்டீங்கன்னு நம்புறேன். ” என்ற நீதிபதி காவல்துறையினருக்கு கோர்ட் வளாகத்தில் தினகரன்னை வரவழைத்து காவியாவை சந்திக்க ஏற்பாடு செய்ய உத்திரவிட்டார்.
சற்று நேரத்திற்கு பிறகு ...!
நீதிமன்ற வளாகத்தில் காவியாவின் பெற்றோர்கள், தினகரனின் தந்தை மற்றும் காவியா-தினக்ரனின் தோழமைகள் சிலபேருடன் காவியா தினகரனின் வருகைக்காக காத்திருந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் காவியா- தினகரனின் காதல் வெளிப்படப்போகிறது என்பதை அங்கிருக்கும் யாரும் அறிந்திருக்கவில்லை. காவியாவும் கூட..!.
போராட்ட சம்பவத்தில் ஆக்ரோஷமாக இருந்த தினகரன் மயங்கிவிழந்த அந்த காட்சியிலேயே நிலைகொண்டிருந்த காவியாவின் மனநிலையில் எப்படி இருக்கபோகிறான் என்று எகிறிக்கொண்டிருந்தது ஆவல். எரிந்துக்கொண்டிருந்தது காதல்.
ஒரு வெள்ளை வாகனத்தில் தினகரன் வந்த இறங்கிய அந்த நிமிடத்தில் , உடல் முழுவதும் இரத்த வடுக்கள், வீக்கங்களோடு தினகரனை கண்ட அந்த நொடியில் காவியா பதறித்துடித்து...
” தினா.. தினா..... தினா. “ என்று அலறித்துடித்து ஓடிவந்து தினகரனை இறுக்கமாக, மிக மிக இறுக்கமாக கட்டியணைத்து, அவனின் முகத்திலிருக்கும் அந்த இரத்தகாயத்திற்கு அழுத்தமாக உதடு பதித்தவளுக்கு , முத்தத்தில் உணர்ந்த இரத்த சுவையில் மொத்த உணர்வும் வெடித்துசிதறி துடிதுடிக்கும் தன் இதழால் தினகரனின் முகம்முழுக்க தொடர் முத்த கவிதைகள் எழுதினாள்.
எரிமலைக்காரனின் முகமும்
பனிமலைக்காரியின் இதழும்
சங்கமித்தால்
உருகுவது எது ?
பனிமலையா ? இல்லை
எரிமலையா. ?
காதல் உலகத்தில்
அறிவியல் வியாக்கினங்கள்
செல்லுப்படியாகாது
ஞானிகளே...!
“ ஏய் தினா.. என்னமா என்னடா ஆச்சு. ஏன் டா இப்படி இருக்க. அடிச்சுட்டானுங்களா .. ? உன்னை பார்க்காம என்னால இருக்கமுடியாதுடா. செல்லம். மிஸ் யூ டா “ காவியாவின் அதிரடி காதல் முத்த யுத்தத்தில் தடுமாறிய தினகரன்.
“ குட்டி.... குட்டிம்மா. நான் நல்லா இருக்கேன் டா. அய்யோ என்னடா தலையில கட்டுப்போட்டு இருக்க. உன்னையும் அடிச்சானுங்களா. முடியல முடியல டா........ ஒன்னுமே புரியல காவி“ அந்த சூழ்நிலையில் எதுவும் பேசத்தெரியா மழலையானானது தினகரனின் மனது. ஆனால் பேசத்தெரிந்திருந்தது அவனின் கண்களும் இதழ்களும்..!
காவியாவின் இருபுருவங்களுக்கு மத்தியில் முத்தம் ஒன்று மட்டும் கொடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான் தன் உணர்ச்சி கிளர்ச்சியை.
காமத்தால் அல்லாமல் உணர்வால் எழும் காதலன், தன் காதலிக்கு முதன் முதலாக இதழோடு இதழ் முத்தம் கொடுப்பதில்லை. முன் நெற்றியில பதிக்கும் அந்த முதல் முத்தம் பதித்தாலே அது தூய்மையான காதலாக இருக்கும்.
தினாவின் முத்த பதிப்பில் சப்த நாடிகளிலும் காதல் இசையை உணர்ந்த காவியாவிற்கு, கிளர்ச்சியடைந்தது உணர்ச்சி..! காதலன் மீதான பரிதாபம், அனுதாபம் என பரிணாமடைந்து தாபம் ஏறி இதழ்- இதழ் முத்தம் கொடுக்க தூண்டியது. ஆம் அவளையும் அறியாமல்.
இயல்பை மறந்துபோகும் தருணத்தில் வெட்கங்கள் வருவதில்லையாம்.
பதித்துவிட்டாள். இல்லை சொல்லிவிட்டாள் தன் காதலை.. அவளின் செவ்விதழால்.. தினகரனின் இதழில்.........!
முதன்முறையாக
முதல் முத்தத்தை
முதல் காதலியிடம்
உண்மை காதலோடு
பெண்மை இதழை
சுவைத்தவர்களுக்கு தெரியும்தானே..?
காதல் காமத்தில் வருவதல்ல என்று...!
இது காதலர்களுக்கே தெரியாத காதல் சூத்திரம்..
இதை பார்த்துக்கொண்டிருந்த
காவியாவின் தந்தைக்கு ஏறிக்கொண்டிருந்தது ஆத்திரம். “ஏய் காவி “என்று சத்தமிட்டு அடிக்க முயன்றவரை காவியாவின் அம்மாவின் கைதடுத்து
“ வேண்டாம். கண்டிக்காதீங்க. இப்போ அவ அவளாக இல்ல. முத்திப்போச்சு. இனி கட்டிப்போட்டு பிரயோஜனம் இல்ல. நம்ம தலையெழுத்து இந்த கன்றாவியை எல்லாம் பார்க்கனும்ன்னு இருக்கு. “
அப்போது குறுக்கிட்ட தினகரனின் தந்தை. ”வெயிட் அவசரப்படாதீங்க. நம்ம பசங்க மத்தவங்க மாதிரி இல்ல. ” என்று சொல்லியவர் தினகரன் காவியாவிற்கு அருகில் சென்று
“ தினா... காவியா............... என்ன இது. ? கமான் நார்மலா இருங்க. எமோஷனல் ஆகாதீங்க .
கொஞ்சம் திரும்பி பாருங்களேன். நீங்க இருப்பது எந்தமாதிரியான இடம்ன்னு தெரியுதா.. “ சற்று கோவத்துடனே கண்டித்தார் .
இருவரும் சற்று தலைகுனிந்தனர் . தலைகுனிந்தாலும் உணர்ச்சியில் தவறு செய்தோம் என்று அவர்கள் உணரவே இல்லை. புதிய உலகத்தில் சென்றவர்களுக்கு எந்த அவமானமும் தெரியாது.
இந்த நேரத்தில்.......... ஒரு செய்தி அங்கு பரவுகிறது.
===ஓர் அரசியல்வாதியை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு சொல்லியது சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பினால் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் தருமபுரி அருகே ...கோவை தனியார் கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தை எரித்தனர் மூன்று மாணவிகள் உயிர் எரிக்கப்பட்டதாக அஞ்சப்படுகிறது=========
தினகரன் காவியா பொங்கி எழுந்தனர். காரணம் அந்த தனியார் கல்லூரி என்பதே இவர்கள் படிக்கும் கல்லூரிதான்.
(தொ.. ட.. ரு... ம் )
------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்