எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் விரல்மாறும் தொடர்கதை - பாகம் 6 - ரம்யா சரஸ்வதி

விடியலுக்கு கொஞ்சநேரம் மிச்சமிருப்பதை முதலாக அறிவித்திருந்தது ஊர்க்குருவி.....இனி……..


சற்று சுதாரித்தவளாய் வேகமாய் எழுந்த ஜீவிதா சரஸ்வதியை அங்கிருந்து கூட்டிச்செல்ல முடிவெடுத்தாள்…..சரஸ்வதியின் உடுப்புகளை சரிசெய்து அவளை எழுப்பினாள்….


ஆனால் பல மிருகங்களால் வேட்டையாடப்பட்ட அந்த மானின் நிலை
“பூவுக்கே உரிதான அழகிய இதழ்களை இழந்து வெறும் காம்பாக, கசங்கிய காகிதமாக காட்சி அளித்தது” …..
அதாவது வெறும் உயிர் மட்டுமே ஊசலாடிக்கொண்டிருந்தது….


தொடர்ச்சியாக வடியும் குருதியுடனும் தாங்காத வலிகளுடன் துடிக்கும் சரஸ்வதியை எப்படி கூட்டிச்செல்வது என செய்வதரியாது திகைத்து நின்றாள்….


அப்பொழுது ................................................யாரோ விட்டு விட்டு கைத்தட்டும் சத்தம் எதிரொலிக்க தனக்கு பழக்கமான சத்தம்தான் என்று ஊர்ஜிதம் பண்ணிக்கொண்டு சத்தம் வரும் இடத்தை நோக்கி காற்றாக பறந்தாள் ஜீவிதா…..…


ஆம் அவள் எண்ணியது சரியே….அங்கு தொலைவில் ஒரு திருநங்கை கைதட்டிக்கொண்டு இருந்தாள்….( பொதுவாக தன்னுடன் வந்த திருநங்கை வேறு திசை சென்றிருந்தால் மீண்டும் அவர்களை அழைக்க இவ்வாறு கைத்தட்டி அழைப்பது அவர்களது வழக்கம் )


அத்திருநங்கைக்கு சற்று மத்தியவயது இருக்கும்…. ஆனாலும் அவளது பிறைப்போன்ற பால்வடியும் முகமும் , அந்த அழகிய முகத்தை மேலும் மெருகூட்டுவதுப்போல் சிவப்பு நிறத்தில் அழகிய நெற்றிப்பொட்டும் , எழில் கொஞ்சும் அழகிய சிரிப்பும் , மின்மினிப்பூச்சின் ஒளியாய் மிளிரும் தேகமும் கண்டால் பெண்களே பொறாமை கொள்வார்கள்….அந்த அளவிற்கு அழகாய் இருந்தாள்…..


தனக்கு உதவ இவர்தான் சரியான நபர் என வேகமாக மூச்சிரைக்க அவளிடம் சென்றாள் ஜீவிதா….
ஆனால் அவளால் அவளிடம் பேசக்கூட முடியவில்லை மூச்சடைத்தது மிகுந்த ஓட்டத்தின் காரணமாய்…..ஜீவிதாவை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தண்ணீர் தந்தாள் அந்த திருநங்கை….
அதை வாங்கிப் பருகிய ஜீவிதாவை பார்த்து அவள்


என் பேரு எவர்ஸ்மைல்…. நா ஒரு திருநங்கை ….என்னைப்போல உள்ளவங்களுக்கு வாழ்க்கையில தான் மகிழ்ச்சி இல்ல…அதான் என் பேர்-ல யாவது ஸ்மைல் இருக்கட்டும்னு இப்படி வச்சுகிட்டேன்….ஆமா உன் பேரு என்ன??உன்னப்பாத்தாலும் என் ஜாதிமாறிதான் தெரியுது…ஆனா உன்ன நா இதுக்கு முன்னாடி இங்க பாத்தது இல்லையே….உனக்கு என்ன பிரச்சனை…எதுக்கு இப்படி மூச்சடைக்க ஓடிவந்த…..????


அவள் கேட்ட அடுத்தகணமே விடாத மழையின் பெரும் சத்தம்போல் நடந்த அனைத்தையும் கண்ணீர் மல்க கூறி கதறினாள்……அதை கேட்க கேட்க எவர்ஸ்மைல்-ன் கண்ணில் இரத்தக்கண்ணீரே வந்தது…..ஜீவிதா அனைத்தையும் சொல்லி முடிக்கையில் வேகமாய் அவளை கட்டி தழுவி உன் அம்மா நா இருக்கேன் கவலப்படாத மா என்று ஆறுதல் சொல்லினாள்….


அப்பொழுது ஜீவிதாவின் பின்னால் சில உருவங்களின் நிழல்கள் படையெடுத்து நிழலாடியது…..


அவர்களை கண்ட ஜீவிதா திடுக்கிட்டாள்….காவலர் உடையில் மூன்று பெண்கள் நின்றிருந்தனர்......அய்யகோ என் வேட்டையை தொடங்கும் முன்பே அதற்கு மூடுவிழாவா என்று மனதில் குமிறினாள்….


அப்போது அதில் ஒரு பெண்….


அக்கா யாருக்கா இது ??? புதுசா இருக்கே இந்த பொண்ணு……..நம்மக்கூட்டத்துல நா பாத்ததே இல்லயே என்றாள் கமலி…


(ஆம் எவர்ஸ்மைல் கைத்தட்டலின் ஓசைக்கு அவளைக்காண வந்த அவள் போன்ற அவள் தோழிகள்….)


அந்த பெண்ணின் குரலை கேட்டப்பின்பே ஜீவிதா அமைதிக்கொண்டாள்…ஆம் அவர்கள் மூவரும் திருநங்கைகளே……


இருந்தாலும் ஜீவிதாக்கு குழப்பம் தீரவில்லை….இவர்கள் காவலர்கள் உடையில் எப்படி?????? என அவளுள் கேள்விக்கனைகள் அவள் நெஞ்சை துழைத்தன….நம் போன்ற பெண்களுக்கு அரசாங்கம் இப்படியும் ஒரு பெரிய மதிப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ன ??? அப்ப எவர்ஸ்மைல் அம்மா –வும் காவலதிகாரியா….????? அய்யயோ நான் வேற எல்லாத்தையும் சொல்லிட்டேனே….இனி சரஸ்வதியின் நிலை என்ன??? என் நிலை என்ன??? என் லட்சியம் என்னாவது ??? என்று எண்ணத்தில் மூழ்கி சிக்கி தவித்தாள்….


ஜீவிதாவின் பயத்தை அவள் விழியில் புரிந்துக்கொண்ட எவர்ஸ்மைல் ………..


பயப்படாத மா இவுங்கலாம் நிஜக்காவலர்கள் இல்லை……இவுங்க மூணுபேருக்கும் காவலர் ஆகனும்-னு ஆசை….ஆனா நம்மலப்போல உள்ளவங்களுக்கு எங்க அதெல்லாம் நிறைவேறும்…..நிறைவேறிட்டாலும் எங்க அனுபவிக்கவிடுறாங்க…..இந்த உலகத்துல பொறுத்தவர நம் ஆசைகள் எல்லாம் எட்டாக்கனி….. வெறும் கனவுக்கண்டு தான் அதை அனுபவிக்கனும்…..அதான் இப்படி நைட் டைம்ல இந்த உடைய உடுத்திக்குவாங்க….
அவுங்களுக்கும் ஒரு பாதுகாப்பு…..மத்த பெண்கள்கிட்ட வம்பு பண்ணுற பொறுக்கி பசங்களையும் அடக்க உதவியா இருக்கும்.….


இப்பொழுது தான் ஜீவிதாவிற்கு உயிரே வந்தது…..சரியான இடத்தில் தான் உதவி நாடி வந்துள்ளோம் என ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்…….


எவர்ஸ்மைல் நடந்த அனைத்தையும் அவள் தோழிகளுக்கு கூறினாள்…


அக்கா நாம கண்டிப்பா உதவி பண்ணியே ஆகனும் அக்கா என்று கமலி கண்ணீர் பொங்க கூறினாள்….


எல்லோரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்…….. சரஸ்வதியின் அலறல் சத்தம் துளிக்கூட இல்லை….. ஜீவிதாவிற்கு உயிரே போய்விடும் போல் இருந்தது….. அவள் எண்ணங்கள் எங்கெங்கோ அலைப்பாயத் தொடங்கியது….இறுதியில் அவள் எண்ணங்களே ஒரு முடிவுகட்டிவிட்டது……


இல்லை !!!! இல்லை !!! உனக்கு ஒன்னும் ஆகாது….உன்ன சாகவிடமாட்டேன் சரஸ்வதி…..என்னப் பாரு…. எழுந்திரி…. நீயும் என்னவிட்டு போய்டாத…. எழுந்திரி….நாம சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு எழுந்திரி……என்று ஜீவிதா கதறினாள்….


இரு ஜீவிதா அவளுக்கு ஒன்னும் ஆகாது….கொஞ்சம் நகரு நா பாக்குறேன்…. இது எவர்ஸ்மைல்


இதயத்துடிப்பு துடிக்கவா வேண்டாமா என்று யோசனையில் இருப்பதுப்போல் மெலிதாகத்துடித்தது….


எவர்ஸ்மைல் மிகுந்த மகிழ்ச்சியுடன் - உயிர் இருக்கு ஜீவிதா..


பொங்கிவழியும் பால் போல் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சி பொங்கியது…..


இவள நம்ம காருண்யா டாக்டர்-ட கூட்டிட்டு போ கமலி…அவுங்ககிட்ட நடந்தத சொல்லு….அவுங்க பெண்களுக்கும் நம் போன்ற பெண்களுக்கும் நிச்சயம் உதவி பண்ணுவாங்க…..அதான் ஜீவிதாவுக்கும் இந்த பொண்ணுக்கும் பாதுகாப்பு…. மத்த மருத்தவமனை –ல சேர்க்கமுடியாது…. பத்திரிக்கை-ல கற்பழிப்பு –னு கிழி கிழி –னு கிழிச்சிடுவாங்க….இந்த பொண்ணோட வாழ்க்கையே போய்டும்…ஜீவிதாவும் கொலை பண்ணதுக்கு ஜெயிலுக்கு போறமாறி ஆகிடும்….


ஆமாக்கா நீ சரியாதான் சொல்லுற….. சரி அக்கா நீ வரலையா???


நானும் ஜீவிதாவும் இங்க சில வேலைய முடிச்சுட்டு வரோம்….


ஹ்ம்ம் புரியுது அக்கா….நாங்க முன்னாடிப்போறோம்…… இது கமலி


சிறிது நேரம் கழித்து காருண்யா டாக்டர் மருத்துவமனைக்கு ஜீவிதாவும் எவர்ஸமைல் –ம் வந்தனர்…


ஜீவிதாவின் கண்கள் செல்லும் வழியில் ஒவ்வொரு அறையிலும் அலைப்பாய்ந்தது கொண்டிருந்தது…….ஒரு வழியாய் கமலியை பார்த்துவிட்டனர்….


என்ன கமலி அந்த பொண்ணு எப்படி இருக்கா?? இது எவர்ஸ்மைல்


இப்ப பரவாலக்கா…போற உயிர புடிச்சு நிப்பாட்டி சீரா துடிக்க வச்சுட்டாங்க நம்ம டாக்டர் அம்மா….பாவி பயலுங்க மிருகத்தனமா வேட்டையாடி இருக்காங்கனு டாக்டர் அம்மா சொன்னாங்க….எப்படியும் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கனுமாம்…..அவுங்களே செலவு எல்லாம் பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க…..எப்புட்டு நல்ல மனசுனு பாரேன் அக்கா அந்த டாக்டர் அம்மாக்கு


நான் தான் அப்பவே சொன்னேன் –ல கமலி அதான் உன்ன இங்க போக சொன்னேன்…. இது எவர்ஸ்மைல்


அவர்களின் பேச்சை இடைமறித்து சரஸ்வதி எங்க இருக்கா என ஜீவிதா கேட்டாள்....இந்த ரூம்லதான் இருக்காங்க வாங்க போய் பார்க்கலாம் என்றாள் கமலி


அவள் அருகே சென்ற ஜீவிதா அவள் பாசத்துடன் தலையை மெல்ல கோதினாள்….அப்பொழுது மெல்ல பொழுது உதிப்பது போன்று கண் விழித்துப் பார்த்தாள் சரஸ்வதி….


இப்ப எப்படி இருக்கு சரஸ்வதி??? என்று ஜீவிதா கேட்டாள்….


பரவாயில்லை என்று கண்ணில் ஜாடையாக கூறினாள்……


ஜீவிதா கண்ணு சரஸ்வதி அப்பா அம்மாக்கு தகவல் சொல்லலயா டா??? இது கமலி


அவளுக்கு யாரும் இல்லக்கா……சின்னவயசா இருக்கப்பவே அவ அம்மா அப்பா உடம்பு சரி இல்லாம இறந்துட்டாங்க ….நானும் சத்தியாவும் மட்டும் தான் எல்லாமே…..


அதுவும் ஒரு வகையில நல்லதா போச்சு….அவுங்க இப்ப உயிரோட இருந்தா துடி துடிச்சு போயிருப்பாங்க….. இது எவர்ஸ்மைல்


மறுநாள் காலையில் செய்தித்தாளில் முதல்பக்கத்தில் கோயம்புத்தூர் பஸ்டாண்டில் வாலிபர்கள் தகராரில் ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொலை என்ற செய்தி வந்தது…..இதைப்பார்த்த கமலி எவர்ஸ்மைலிடம்………. அக்கா தடயமே இல்லாம வேலைய கச்சிதமா நீங்களும் ஜீவிதாவும் முடிச்சிட்டீங்க என்று புன்னகைத்தாள்………


இப்படியே சில நாட்கள் ஓடின…


இப்பொழுது சரஸ்வதி ஒரு புதிய சக்தியுடன் வேட்டைக்கு தயாரன நிலையில் வந்துவிட்டாள்….அவர்களுக்கு பக்கத்துணையாக எவர்ஸ்மைல்-ம் கமலியும் துணையாய் இருப்பதாய் உறுதி அளித்தனர்…..


முதல் நாள் வேட்டைக்கு தயாரான நிலையில் எல்லோரும் புறப்பட ஆயத்தமானார்கள்….அப்பொழுது திடீரென சரஸ்வதி மயக்கமுற்றாள்….பதறிய ஜீவிதா உடனே அவளை படுக்கவைத்து தொலைபேசியில் மருத்துவரை அழைத்தாள்……


மருத்தவரின் பரிசோதனைக்கு பிறகு முடிவானது சரஸ்வதி தாயுற்றிருக்கிறாள் என்று…..


சரஸ்வதிக்கு இடி இறங்கியதுப்போல் இருந்தது……


ஆனால் ஜீவிதாவிற்கும் , எல்லோருக்கும் ஒருபக்கம் ஆனந்தமாய் இருந்தாலும் மறுபக்கம் தந்தை தெரியாத குழந்தைகள் இவ்வுலகில் படும் இன்னல்களை நினைத்தால் வருத்தமாகவும் இருந்தது….


ஜீவிதா மெல்ல சரஸ்வதியை நோக்கி சென்றாள்…..


உன் மனநிலை எனக்கு நல்லா புரியுது சரஸ்வதி…..நீ இப்ப தூங்கு நாம காலை-ல பேசிக்கலாம் என்று கூறிவிட்டு அனைவரும் உறங்கச்சென்றனர்….


ஜீவிதாவிற்க்கு மனமே சரியில்லை….சரஸ்வதி என்ன முடிவு எடுப்பாள் என்ற எண்ணம் அவள் மனதை அரித்துக்கொண்டிருந்தது…..


அப்பொழுது ……………........................................ஏதோ ஒரு சத்தம் கேட்டது…ஜீவிதா ஓடிச்சென்று சரஸ்வதியின் ரூம்மை தட்டினாள்….திறக்கவே இல்லை…..தன் எண்ணம் ஊர்ஜிதம் ஆனது என புரிந்த ஜீவிதா கதவை வேகமாய் தள்ள திறந்தது கதவு…


சரஸ்வதி தன் உயிரை பிரிக்கும் போராட்டத்தில் காற்றாடியுடனும் சேலையுடனும் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தாள்….


அவளை தடுத்த ஜீவிதா அவள் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தாள்…


என்னக்காரியம் பண்ணப்பாத்த நீ???? உன்ன இதுக்காகவா கஷ்டப்பட்டு உயிர்பிழைக்க வச்சோம்??? சத்யா இருந்தா இப்படி பண்ணி இருப்பீயா???இல்ல இப்படி நீ பண்ணுறத சத்யா விரும்பி இருப்பானா???சொல்லு சரஸ்வதி……. என்று கோபமாக கடிந்துக்கொண்டாள் ஜீவிதா


என்ன என்னப்பண்ண சொல்லுற ஜீவா…………….. அப்பா இல்லாத குழந்தைகளுக்கே இந்த உலகத்துல அவ்வளவு கஷடமும் , அவமானமும் வரும்…..என் போன்ற கெடுக்கப்பட்ட பெண்ணிண் குழந்தைகளுக்கு காலம் முழுக்க அவமானமும் அசிங்கமும் தான் கிடைக்கும்….அப்படி அந்த அவமானத்த என் குழந்த அனுபவிக்க நா விரும்பல….என் குழந்தைய கொல்லவும் எனக்கு மனசு வரல…..அவ்வளவு கல்நெஞ்சம் இல்ல நா….. அதான் என் உயிரப்போக்கிக்க முடிவு பண்ணிட்டேன்…..என்று கண்ணீரில் வெடித்து சிதறினாள் சரஸ்வதி….


ஜீவிதாவிற்கும் அவள் வாதம் சரியாய் தோன்றியது , காரணம் பல அவமானங்களின் சோகம் அவள் மனதில் வடுவாய் இருப்பதால்…….


ஜீவிதாவின் மனதில் மீண்டும் மீண்டும் சரஸ்வதியின் ஒரே குரல் மட்டும் ஒயாது ஒலித்துக்கொண்டிருந்து “என்ன என்னப்பண்ண சொல்லுற……………………………… ஜீவா………………………………”


சிறிது நேரம் கனத்த மெளனத்தில் சிந்தித்த ஜீவிதா உன் குழந்தைக்கு அப்பா கிடச்சாச்சு….. நீ போய் நிம்மதியா தூங்கு என்றாள்…………


சரஸ்வதிக்கு ஒன்றும் விளங்கவில்லை…..


என்ன சொல்லுற ஜீவா ????உனக்கு என்ன சித்தம் கலங்கிடுச்சா என்ன??? என் போன்ற பெண்ணிண் குழந்தைக்கு யாரு அப்பா-வா இருக்க ஒத்துக்குவா????? நானும் என் சத்யா –வோட இடத்த யாருக்கும் தரமாட்டேன் என்றாள் சரஸ்வதி……


என் கலங்கிய சித்தம் இப்பதான் தெளிவாகி இருக்கு சரஸ்வதி…..நாளைக்கு காலை-ல உனக்கு எல்லாம் புரியும்….நீ இப்ப தூங்கு என்றாள் ஜீவிதா…..


சரஸ்வதி குழப்பத்துடன் தூங்கச்சென்றாள்….


மறுநாள் காலை சரஸ்வதி எழுந்ததும் ஜீவிதாவை வீடு முழுக்க தேடினாள்….. ஜீவிதாவை எங்கும் காணவில்லை….இந்த காலை-லயே எங்க போன ஜீவிதா????? என்று கேள்விகனைகள் அவள் மனதை துளைத்தன………


அப்பொழுது……………........................யாரோ காலிங்பெல் அடிக்கும் சத்தம்…… சென்று கதவை திறந்தாள்……ஒரு வாலிபன் நின்றிருந்தான்….எங்கோ பரிச்சயமான முகம்போல் தெரிகிறதே என்று சரஸ்வதி அவனை உற்றுநோக்கினாள்…..


என்ன சரஸ்வதி என்ன தெரியலயா என்று கேட்டான் அந்த இளைஞன்


அந்த குரலைக்கேட்ட சரஸ்வதிக்கு வார்த்தைகள் திக்குமுக்காடியது……


நீ நீ நீ ஜீ ஜீவிதா தான?????


ஆமா சரஸ்வதி் நா ஜீவிதா தான்


என்ன ஜீவா இது ??? ஏன் இப்படி பையன்மாறி மாறிட்ட???? உனக்கு பெண்ணா இருக்கதானே பிடிக்கும்…. என்னக்கோலம் இது???


காலம் எனக்கு உணர்த்திய கோலம் சரஸ்வதி…. என் நண்பனுக்காக இதுவர நான் எதும் செய்தது இல்ல..அவன் இப்ப உயிரோட இருந்தா என்னப்பன்னுவானோ அததான் நா இப்ப செய்யுறேன்……


சரஸ்வதியின் குழம்பிய முகத்தை கண்ட ஜீவிதா ……


என்னப் புரியலயா…..உன் குழந்தைக்கு அப்பா –வா இனி நாதான் இருக்கப்போறேன்…. ஜீவா வாக…………..


எனக்காக என் குழந்தைக்காக எவ்வளவு பெரிய தியாகம் பண்ணி இருக்க ஜீவா நீ…… இல்ல இதுக்கு நா ஒத்துக்கமாட்டேன்…… என் வாழ்க்கை முடிந்து போன ஒன்று…உனக்கு அப்படி இல்ல…..நீ எதுக்காக ஆசைப்பட்டியோ அதையே இன்னைக்கு என்னால் இழந்து நிக்குறத என்னால பாக்கமுடியாது ஜீவா எனக்கூறினாள் சரஸ்வதி…..


ஹ்ம்ம்…எனக்கு-னு வாழ்க்கைலாம் இருக்கா என்ன ???? என்றாள் ஜீவிதா விரக்தியாக……

எனக்கு-னு ஆசைகள் இருந்த காலம் –லா போய்டுச்சு சரஸ்வதி… இனி நா உனக்காகவும் உன் குழந்தைக்காக மட்டும் வாழ ஆசைப்படுறேன்…..அதுக்கு இந்த சமூகத்துல எந்த அவமானமும் வரக்கூடாது…..அந்த அவமானத்தோட வலி எவ்வளவு கொடியது-னு எனக்கும் தெரியும்……அதுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன்…. என்ன மன்னிச்சிடு உன்கிட்டக்கூட நான் விருப்பம் கேக்கல……


நாளைக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…..இந்த கல்யாணம்-லா குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் போலி சமுதாயத்திற்காகவும் தான்….. ஆனா நான் உன் குழந்தைக்கு மட்டும் நிச்சயம் நல்ல அப்பாவா இருப்பேன்….என் சத்யா இருந்தா இதத்தான் பண்ணிருப்பான் சரஸ்வதி…….மாட்டேனு சொல்லாத……


ஜீவிதாவின் பிடிவாதத்திற்கு முன் சரஸ்வதிக்கு வாதங்கள் தோற்றுப்போயின… மெளனமாக தன் கண்ணீரால் ஜீவிதாவின் பாதங்களை கழுவி தன் நன்றிகளில் சம்மதம் சொன்னாள்…..


மறுநாள் எல்லோரும் கோவிலுக்கு சென்றனர்……


சாமி இவுங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணணும் –னு எவர்ஸ்மைல் குருக்களிடம் கூறினாள்


பேஷா பண்ணிட்டாப் போச்சு…. மாப்பிள்ளைவா உங்க பேரையும் பெண்பேரையும் சொல்லுங்க….


ஜீவிதா , சரஸ்வதி சாமி


குருக்களின் முகம் மாறியது ஜீவிதாவின் குரலைக்கேட்டு…..மன்னிச்சிடுங்கோ இந்தமாறி ஆட்களுக்கெல்லாம் இங்க கல்யாணம் பண்றதுஇல்ல…நீங்க வேற எங்கையாவது போய் பண்ணிக்கோங்கோ


ஜீவிதாவிற்க்கு கோபத்தில் கண்களே சிவந்தது….


யோவ் குருக்களே ஏன் எங்களமாறி ஆட்கள்ப்பார்த்தா எப்படி யா தெரியுது???நாங்களும் மனிஷங்க தான் என்ன…….கோவில்-ல மட்டும் சிவனும்,பார்வதியும் சேர்ந்து இருக்குறத அர்த்தநாதிஸ்வரர்-னு விழுந்து விழுந்து கும்புடுறீங்க…ஆனா நேர்-ல எங்கள மட்டும் ஏன் இப்படி வார்த்தையால சாகடிக்குறீங்க….????????????? நீ என்னயா சொல்றது இனி நா இங்க கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்….வா சரஸ்வதி போலாம் என ஜீவிதா கோபமாக சென்றாள்


அவளது கோபம் அவர்களை நேராக மலைஉச்சிக்கு கூட்டிச்சென்றது…..


இந்த இயற்கைதான் கடவுள்…..இந்த பஞ்சப்பூதங்கள் ஆசிர்வாத்தோட இப்ப உன்ன மனைவியா ஏத்துக்குறேன்னு சொல்லி சரஸ்வதியின் கழுத்தில் ஜீவிதா மன்னிக்கவும் ஜீவா தாலிக்கட்டினான் …….


உலகிலே இது ஒரு புதுமையான உண்மையான உணர்வுப்பூர்வமான திருமணம் என்று கமலி சொல்லி முடிக்க அதை ஆமோதிப்பதுப்போல் இயற்கை அன்னை ஆசிர்வாதம் செய்தாள் மழைத்தூறல்களில்……


இனி………….?????????????????

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (28-Sep-14, 1:44 pm)
பார்வை : 265

மேலே