மயானம் - நாகூர் கவி

மண்ணாலான
ஆறடி கூடு...

வாடகையில்லா
தனி வீடு...

ஆறறிவு மனிதர்களின்
அடக்கஸ்தலம்...

ஐம்பூத சக்திகளும்
அடங்கும் ஸ்தலம்...

சாதி மோதல்
இல்லாத புனித இடம்...

சட்டம் ஒழுங்கு
கெட்டிடாத ஆவிகள் மடம்...

பாமரனும் பண்டிதனும்
பாகுபாடின்றி...

துயில் கொள்ளும்
சமத்துவபுரம்...!

எழுதியவர் : நாகூர் கவி (28-Sep-14, 12:31 pm)
பார்வை : 336

மேலே