காதலின் முகவரி தேடும் காதல் கடிதம்-1-வித்யா
காதலின் முகவரி தேடும் காதல் கடிதம்-1..! வித்யா
முகமறியா
முகவரியறியா
நலம் நலமறிய
ஆவல் என ஆரம்பிக்கும்
இக்கவியிலும் காதலிருக்கிறது.......!!
இதத்திற்கு பனித்தூவும்
நமக்கென உதித்த
கோடைக்காலமொன்றில்
சிறகுகள் கோர்த்து
பட்டாம் பூச்சியாய்
உன்னோடு நான் திரிய வேண்டும்.........!!
என் காதல்
சுயநலமானதெனும்
கோட்பாட்டிற்குள்
நீயின்றி நான்
சுவாசிக்க மறுக்க வேண்டும் .....!!
கலைகள் கூட
கற்பனை சார்ந்தவைஎனில்
என் காய்ச்சல் காதல்
சார்ந்ததாயிருக்கும்.......!!
காதலே......
நேற்றைக்கெல்லாம் நீ
என் வீட்டு ஜன்னல்
கடந்து போனாய்..........
உன் முதல் பார்வை
மிக இனிமையானது...........
உன் முதல் புன்னகை
மிகப் பிரகாசமானது..............
எனை உனக்குப்
பிடித்திருக்கிறதா....?
உன் தலை சாய்த்து
பார்வை வீசி இருக்கிறாயா..?
எனைக் காதலிப்பாயா.?
நீ எனை
ஏற்றுக்கொள்ளும் வேளையிலே
ஒரு தீக்கடலுக்குள்
நான் மிதந்து கொண்டிருப்பேன்...!!
உன்னிடம் நீ கேட்டுக்கொள்......
நீ ஒன்றும்
அவ்வளவு கொடூரமானவன் அல்ல
என்பதை உறுதி செய்து கொள்.........!!
அவ்வாறெனில்
எனக்கான சுதந்திரத்தை
உன்னில் சிறைபடுத்திடு.........!
உன் சுடும்
வார்த்தைகளிலும்
பாதி சிரிக்கும்
புன்னகை இதழ்களோடு
காதல் கரங்களால்
இக்கடிதத்திற்கு
பதில் அனுப்பிவிடு............!!
காதலை விவரிக்க
வார்த்தைகளில்லாமல் தவிக்கிறேன்.......!!
அழகினும் அழகாய்
ஒரு வார்த்தையும்........
காதலினும் காதலாய்
ஒரு வார்த்தையும்.........
கண்டுபிடித்து சொல்லிவிடு................!!
-பதில் கடிதத்திற்காகக் காத்திருக்கிறேன்.............!!
பி.கு:
இக்கடிதம் காதலனுக்கு எழுதியதல்ல
காதலுக்கு எழுதியது. ஒரு சிறு முயற்சி..........!!
-கடிதங்கள் தொடரும்