என் அண்ணாவுக்குப் பிறந்தநாள்-வித்யா

நீ என் முதல் சகோதரன்
என் முதல் நண்பன்............!!

ஒரு யானையின் பலம்
உன் வார்த்தைகள்..............!!

சிறு பூவின் மேன்மை
உன் அன்பினில்..................!!

கவிதைகளில் அரும்பி
இதையங்களில் பூத்தது நம் உறவு........!!

என் அண்ணாவுக்குப் பிறந்தநாள்..........!

இந்நாளைப்போல எந்த நாளிலும்
இதுவரை உன்னை நான் வாழ்த்தியதில்லை..........!!

வெற்றிகள்
ஒவ்வொரு நாளும் உன்னை முத்தமிடட்டும்

அன்பு
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைக்கட்டும்

மகிழ்ச்சி
எப்போதும் உன்னை சூழ்ந்திருக்கட்டும்...................!!

-இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...............!!

எழுதியவர் : வித்யா (29-Sep-14, 8:19 am)
பார்வை : 4555

மேலே