நான் ஒரு அடிமை
என் விழியிரண்டு போதுமோ
என் தேவதை அழகை ரசிக்க !!
என் கையிரண்டு போதுமோ
என் தேவதையை பற்றி எழுதிட !!
சொற்கள் பல போதவில்லை
அவள் விழி அழகினை விளக்கிட !!
என் ரசிப்பு திறன் போதவில்லை
அவள் காதணி , அவள் கன்னத்தை
முத்தமிட்டதை விளக்கிட !!
என் கற்பனை திறன் போதவில்லை
அவள் கன்னத்தில் உள்ள
மச்சத்தை எடுத்துரைக்க !!
என் வார்த்தைகள் போதவில்லை
அவள் உதடிரண்டும் தீண்டும்
அழகினை கவி பாடிட !!
நானே தடுமாறிவிட்டேன்
என் தேவதையின் அழகின் முன்
அடிமையாகி ...!!!!