நீ எங்கே போனாய்

.."" நீ எங்கே போனாய் ""...

வேகமாய் செல்கின்ற உலகம்
வேடிக்கையாகிவிட்ட எல்லாம்
வேதனையில் கொண்டு சேர்க்கும்
இது அடிமைத்தனமும் இல்லை
ஆணாதிக்க கொடுமையுமில்லை,,

நாணம் நாளும் நடைமுறையில்
நலமாய் இருந்த காலம்போய்
நலிந்தே போனது நாகரீகத்தால்
சமத்துவம் மறுக்கவில்லை நல்
சகோதரத்துவம் எதிர்க்கவில்லை,,,

நான் எதிலே குறைந்தேனென்று
இருக்கவேண்டியத்தை இழந்தவாறே
உரிமை போராட்டமென சொல்லி
மேலாடை குறைந்ததால் போனது
நாணமட்டுமல்ல மீதமூன்றும் ,,,

நாணமென்பது காணமுடியா பெண்
மேனி போர்த்திடும் கவசவுடையதை
இன்றிடம் பூண ம(ற)றுப்பதால்....
நாணம் நவநாகரிக மோகத்தால்
நாண்டுகொண்டு உயிர் நீத்ததோ ,,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (29-Sep-14, 11:49 am)
Tanglish : nee engae ponaai
பார்வை : 456

மேலே