போலி உயர்திணைகள்
வாழ்க்கை என்பது என்ன
வாழும் போது சாதிக்க
வேண்டியவை என்ன
இக் கேள்விக்குப் பலர்
கூறும் கூற்று பல மாதிரி..!!!
ஆனால் உண்மையான
வாழ்க்கை உண்மையான
சாதனை ஒருவர் உழைத்து
முன்னேறுவதிலோ தான்
படித்துப் பட்டம் வாங்குவதிலோ
இல்லை...!!!!
கருணை உள்ளம் கொண்டு
கடவுள் கொடுத்த வரம் நம்
மனிதப் பிறவி என்ற எண்ணம் கொண்டு
சாதி மத பேதமின்றி துன்பம் கொண்டவன்
கண்ணீரைத் துடைத்து கரம் நீட்டி
பசியில் துடிக்கும் ஏழைக்கு உணவுஅளித்து
அன்பானஒருவனாக வாழும் மனிதனே
உண்மையான மனிதப் பிறவி..!!!!
இதில் நம்மில் பலர் விதி விலக்கு
நாகரீகப் பிடியில் சிக்கிய
பட்டாம் பூச்சி....!!!!
பசித்தவன் பார்க்க நாம் புசிக்கிறோம்
அழுக்கு உடையில் ஒருவன் நம் அருகில்
நின்றாலே ஒரு அடி விலகி நிக்கின்றோம்
உண்மையில் நாம் மனித நேயம் உள்ள மனிதனா
என்றால் அது கேள்விக்குறியே..!!!
மனிதனைத் தவிர எந்த உயிரும்
அழகு அழுக்குப் பார்த்து உறவு
கொண்டாடுவது இல்லை...!!!
இந்த ஆறறிவு படைத்த மனிதனே
அதிக தீமைகளைச் செய்கின்றான்
இறைவன் மனிதனுக்கு ஆறறிவு கொடுத்தது
ஐந்தறிவு மிருகத்துக்கும் வழிகாட்டியாகஇருக்க
ஆனால் மனிதனுக்கு மிருகம் கற்றுக் கொடுக்கின்றது
பாசத்தின் மகிமையையும்ஒற்றுமையின் பலத்தையும்
அப்போதும் திருந்தவில்லை மனிதன் அவனின்
அகங்காரமும் குறைய வில்லை
அடிபட்ட காகமும் ஊனம் உற்ற காகமும்
இரத்தம் சிந்திய படியே அமர்திருக்கும் காகமும்
நல்ல படியாக இருக்கும் காகமும்
ஒன்றாக உணவு உண்னும் வேற்றுமை காட்டாது
இந்த மனிதன் மட்டும் ஒருவன் உடலில்
ஏதாவது காயங்களோடு இல்லை அழுக்குப் படிந்த
முகத்துடனோ எதிரே அமர்ந்தாலே போதும்
ஐயோ வாந்தி வருகின்றது என்று அவன் காது படவே கூறி
சாப்பிடுவதை நிறுத்தி விடுவதுடன் அவன் மனதையும்
காயப்படுத்தி விடுவார்கள்...!!!
நம்மைப்போல் அவனும் உயிர்தான்
பசி என்பது எல்லோருக்கும் ஒன்றே
என்பதை உணர மறுத்து விடுகின்றது அப்போதுஅவன் மனம்
இதுதான் மனித நேயமா இவர்களை மனிதன் என்பதா
இந்த ஆறறிவுக்குத் தெரியாத ஒன்றாஇத்தனையும்
இல்லை இறைவன் நேரில் வந்தா தண்டிப்பார் என்ற அலட்சியமா
மனிதனை மனிதனே கேவலமாக கணிப்பது நியாயமா
இத்தனை கேள்விக்கும் விடை எத்தனை பிறவி எடுத்தாலும்
கிடைக்காது மனிதிடம்