உன் நினைவின் ஆட்டோகிராஃப் 555

என்னவளே...
உன் இதயம் என் கண்கள்
கண்ட உலகம்...
உன்னுடன் மட்டுமே
பேசிய என் இதழ்கள்...
உன் கைகளை மட்டுமே
கோர்த்து நடந்த...
என் கைகள்...
உன்னோடு ஓடி விளையாண்ட
என் கால்கள்...
உனக்காக துடிப்பது
என் இதயம்...
சொல்ல நினைத்த
என் காதலை...
உன்னிடம் சொல்லாமலே
திரும்பி வந்தேனடி...
என் காதலை
ஏற்க மறுப்பாயோ என்று...
நம் கல்லூரியின்
இறுதி நாளில்...
எனக்கு நீ கொடுத்த
ஆட்டோகிராப்பில்...
உன் கண்ணீர் துளி
பட்டதால் அழிந்த எழுத்துக்கள்...
சொல்லாமல் சொல்லுதடி...
நீ சொல்லாமல் போன
உன் மனதை...
மனதை திருடியவளே
காத்திருகிறேனடி...
காத்திருகிறேனடி நான்
சொல்லாத காதலுடன்.....