அப்பா கடவுள்கிட்ட போய்ட்டார்

கடவுளுக்கு ஆயிரம் சவுக்கு அடி
முகத்தை திருப்பி வைத்துகொண்டு முக்காடு போட்டு நகர்கிறான்
ஊரு கூடி அழுது முப்பதாம் நாள் எல்லாம் முடித்து விட்டனர்
எப்போதோ ஒரு மாதத்தில் சொன்னது
புகைபடர்த்திர்க்கு முன் நின்று பொம்மை கார் கேக்கிறாள் மகள்
அம்மாவுக்கு ஆறுதலாக ஒரு புடவையும் கேட்டுவிட்டு - என்னருகே வந்தால்
அண்ணா ......
அப்பா கடவுள்கிட்ட போய்ட்டார் இப்போ கார் வாங்கி வரணு சொன்னார்
அவள் சொன்ன வார்த்தையில்
நெஞ்சி எலும்புகள் நொறுங்கி நேராக இதயத்தை தாக்கியது
கையை இறுக்கி பிடித்துகொண்டு அங்கிருந்து நகர்த்தேன் துளி கண்ணிர்வுடன் !!!

எழுதியவர் : வேலு (30-Sep-14, 12:34 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 83

மேலே