விரிசல்

என்ன சொல்வேன்
எந்த மொழியில் சொல்வேன்
அன்னமே என்னவருக்கும்
எனக்கும் இடையில் விழுந்த
விரிசலை...!!!!

விதையாய் வந்த ஆசை
காதலாய் வளர்ந்து
திருமணமாய்ப் பூத்து
நறுமணம் வீசும் வேளையிலே
விழுந்த விரிசலை நான் என்னவென்று
கூறுவேன் எப்படிக்கூறுவேன் அன்னமே...!!!

வெள்ளை மனம் பிள்ளைக் குணம்
கொண்ட கள்ளம் இல்லாக் காவலந்தான்
என்னவன் சிலரின் பெரு மூச்சினால்
அடித்த புயலில் விழுந்ததே விரிசல்...!!!!

என்னை அறிந்த அவரும் அவரை
உணர்ந்த நானும் விரிசலின் இரு
பாதையிலும் நின்று தவிக்கும் கதை
நீ அறிவாயோ அன்னமே....!!!!

முழுமதியாக என்னை ரசிப்பார்
முழுமையான இன்பம் கொடுத்தார்
முக்கனியும் உன் செவ்விதழ் போல்
இல்லையடி சுவை என்று ஐஸும்
வைப்பார் இன்று விரிசலினால்
தவிக்கவிட்டார்...!!!!!

இரு மனம் இணைந்த இல்லறத்தில்
இடையிலே வந்து விழுந்தது வறுமை
என்னும் நோய் அவையால் வந்த வினை
தான் விரிசல் ஆனது அன்னமே...!!!!

இந்நோயை வைத்தே அத்தை
வளர்க்க ஆரம்பித்தால் வரதட்சணை
என்னும் விசச் செடியை அதைப் பிடுங்கப்
பலம் இல்லாத் தந்தை மனம் இன்றி
அழைத்து வந்தார் என்னை அன்னமே..!!!

தாயா தாரமா என்று தடுமாறிக்
என்னவர் கலங்கி நிற்க்கின்றார்
அங்கே...!!!!!

விரிவாக நான் உரைத்து விட்டேன்
என் விரிசலின் காரணத்தை அன்னமே
அன்னமே என் எண்ணமே எண்ணமே
அவர்தான் என்றும் அன்னமே....!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (30-Sep-14, 12:18 pm)
Tanglish : virisal
பார்வை : 87

மேலே