சிறகு ஒடிந்த பறவை ஒன்று

சிறகு ஒடிந்த பறவை ஒன்று
சுதந்திர வானில் பறக்கிறதாம்...

விலங்கின் விலங்காக
பறவையின் பறவையாக
மனிதனில் மட்டும்
மனிதனன்றி மகளாக .,

ஆடை களைந்து
வீதியில் கிடக்கின்றனவனின்
வீட்டிற்குள் நுழைய
அனுமதி வேண்டுமா ???

தெருவே சிறகு பிய்ந்த
சேதி கேட்டு
வருமானத்திற்கு விதை
என அதில் ஒருவன்
வானில் பறக்க விட ...

வீதியில் கிடப்பவனும்
வீதிக்கு தள்ளியவனும்
வேடிக்கை பார்க்க

இதோ பறக்கிறது!
வேசி என்று பெயர் பெற்ற
சிறகு ஒடிந்த பறவை ஒன்று
சுதந்திர வானில்...

பார்ப்போர் பார்த்து கொள்ளலாம்
தொடுவோர் தொட்டு கொள்ளலாம்
கிழிந்த ஆடையும்
கீறல் விழுந்த தேகமுமே அடையாளம்...

எழுதியவர் : (30-Sep-14, 7:32 pm)
பார்வை : 197

மேலே