உலகுக்கு நீ யாரென காட்டு

துயரங்கள் சில நேரம்
உன்மனதை மாற்றக்கூடும் !
மாறிவிடாதே என்தோழனே
விடிவுகள் ஒருநாள் நமக்குண்டு !

என்ன செய்வதென புரியாமல்
மனம் குழம்பி அலையக்கூடும் !
கலங்கிவிடாதே என் தோழனே
நம்தேடல்கள் ஒருநாள் நாடிவரும் !

பைத்தியம் பிடித்தவன் போல்
பலர்கண்முன் நாம்படக் கூடும்!
பயந்துவிடாதே என் தோழனே
துயருக்கு நிச்சயம் பலனுண்டு !

செல்லும் பாதையது தெரியாமல்
குருடன் போல் உணரக்கூடும் !
தயங்கிவிடாதே என் தோழனே
தாகங்கள் ஒருநாள் தணிந்துவிடும் !

தனிமையில் நீ இருந்தாலும்
நம்பிக்கை உன்னுடன் கொண்டு !
உன்தடைகள் யாவும் தாண்டி
உலகுக்கு நீ யாரென காட்டு!!

எழுதியவர் : நா.அன்பரசன்... (30-Sep-14, 6:35 pm)
பார்வை : 78

மேலே