இன்றைய கல்வி

இன்றைய கல்வி

இந்த வயதுல என்னடா டென்சன் எங்க அப்பா என்கிட்ட அடிக்கடி கேட்ட விஷயம் இது ....... ஆனால் இன்று பத்தாவது படிக்கும் மாணவர்கள் கூட அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை ஒரே டென்சன்......... ஏன் இப்படி ........?

இன்றைய கல்வி சுகமாய் இருப்பதை விட சுமையாய் இருப்பதே இதற்கு காரணம்.
காலை எட்டு மணிக்கு பள்ளி மாலை நான்கு மணிக்கு முடிகிறது. பின் சிறப்பு வகுப்பு பின் டியூஷன் வீடு திரும்புவது இரவு எட்டு மணி ஒன்பது மணி...........

நேற்று ஒரு ஆறாம் வகுப்பு மாணவனை பார்த்தேன் இரவு ஒன்பது மணிக்கு பள்ளி சீருடை பெயரிய புத்தக மூட்டையுடன் வீடு திரும்பியவனிடம் கேட்டேன் என்னபா இப்ப வரனு அதுக்கு இப்பதான் அண்ணா டியூஷன் முடிந்தது என சொன்னான் கண்கண்ணாடியை சரிசெய்த படி. யோசித்து பார்த்தால் வளர்ந்த நாம் கூட 8 மணி நேரம் தான் வேலை செய்கிறோம் ஆனால் அந்த பிஞ்சு 12 மணி நேரம் மூளைக்கு வேலை தருகிறான். உடல் உழைப்பைக் காட்டிலும் முளை உழைப்பு அதிகம் ஒருவனை களைப்பாக்குமாம்.......
இப்படிபட்ட கல்வி ஒரு மாணவனுக்கு விருப்பத்தை கொடுக்குமா........? வெறுப்பை கொடுக்குமா. ..........,,?

சரி இப்படி கல்வி புகட்டல் எனும் பெயரில் எப்போதும் திணித்து அதை பரிச்சையில் வாந்தி எடுக்க வைத்து பின் அவன் 90 மதிப்பெண் பெற்று வீட்டில் காட்டினால் அங்கும் உன் வகுப்பில் முதல் மதிப்பெண் 98 நீ ஏன் வாங்கவில்லை என கண்டிக்கும் பெற்றோரையும் நான் பார்த்ததுண்டு. இது ஒரு மாணவனை தாழ்வு மனப்பான்மை அடையவும் முதல் மதிப்பெண் பெற்றவன் மேல் ஒரு வெறுப்புணர்வையும் வளர்க்கிறது என்பதை எத்தனை பெற்றோர் புரிந்துள்ளனர் என்பது கேள்விக்குறி........?

அனைவரும் முதல் மதிப்பெண் பெற இயலாது என்பது இயல்பான உண்மை. தன் பிள்ளை வளர வேண்டும் என்ற ஆசை அவனை மன இறுக்கத்தில் ஆழ்த்திவிட கூடாது. கற்றல் என்பது சுதந்திரமான மனநிலையில் நடைபெற வேண்டிய ஒன்று. கற்றலில் புறத்திறன் உள்திறன் கற்றல் வேகம் சூழ்நிலை என ஒவ்வொருவரிடமும் வேறுபாடுகள் உண்டு அதை எல்லாம் புரிந்து கொள்ளாது அவனைப்போல் நீயும் படி என சொல்வது மிகப்பெரிய மடத்தனம் இன்று அதைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள்.

மதிப்பெண் என்பது வாழ்க்கை அல்ல அதையும் தாண்டி மனம் நிலைபடுதல் உலகை உணர்தல் கற்றதை வெளிப்படுத்துதல் என பல உண்டு. ஒரு மாணவனுக்குள் நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை இருக்கும் அதை கண்டறிந்து வெளிப்படுத்த வைப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பொறுப்பு. வெறும் ஏட்டுக்கல்வியையும் மதிப்பெண்களையும் வைத்துக்கொண்டு சாதனை நிகழ்த்த இயலாது. அவர் அவர் திறமைகளை கொண்டே ஒருவரை சிறந்தவராக்க இயலும் என்பதை பெற்றோர் உணர்ந்தால் மதிப்பெண் குறைவானதற்காக தற்கொலை செய்து கொண்ட பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

கல்வி என்பது வேலை தேட மட்டும் அல்ல அது வாழ்வை வாழ கற்பிக்க வேண்டும். தயவு செய்து கல்வியை வியாபாரமாக்கி குழந்தைகளை அதன் பருவத்தை அந்த பருவத்தில் கிடைக்கவேண்டிய மகிழ்ச்சியை மனநிலையை பறித்துவிடாதீர்கள்.

ஓடி விளையாடு பாப்பா என பாடி வைத்ததை படிக்க வைக்கிறீர்களே தவிர விளையாட நேரம் கொடுக்க மறுக்குறீர்களே என்ன நியாயம்.

கல்வியை கொடுங்கள் அளவோடு கொடுங்கள் ஆற்றலை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் வளர்த்தால் அனைத்து குழந்தைகளுமா நிச்சயம் நல்ல நிலை அடைவார்கள்.

என் மனிதில் பட்டதை பகிர்ந்தேன் நன்றி

எழுதியவர் : கவியரசன் (30-Sep-14, 9:52 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : indraiya kalvi
பார்வை : 6973

மேலே