யாரு விட்ட சாபமிது
அருகருகே அமர்ந்த
அறிமுகமானவர் இருவர்
ஆனந்தமாய் பேசுகிறார்
அறிவியல் செய்த கருவியாலே
உழைப்பை தொலைத்து விட்டார்
உயர்வை மட்டும் எண்ணி விட்டார்
கைபேசி கருவியாலே அம்பானி
காசாலே உயர்ந்து விட்டார்
பொய்த்துப் போன வானம்
காய்ந்துப் போன மண்
பாலுக்கு அழும் பிள்ளையாக
வயலிலே வாடியப் பயிர்கள்
தாராளமய மாக்களின் தத்துவத்தில்
தரம் கெட்டுப் போனது பொருளாதாரம்
உலகமய மாக்களின் மோகத்தில்
உயராமல் போனது மனித வாழ்க்கை
புதியப் பொருளாதாரக் கொள்கை
மனிதனை புண்ணாக்கி புரட்டிப் போட்டது
ஆங்கில வழிக் கல்வியோ
தாய் மொழியை அடிமையாக்கியது
மாசான மண்ணை விட்டு
செவ்வாய்க்கு குடிபோக
திட்டமெல்லாம் நடக்குது
மனிதத்தை தொலைத்து விட்டு
மிருகமாய் வாழ மனிதம் நினைக்குது