உயிரே
நாம் இருவர்
உடல் பிரிந்து
நம் இருவர்
உயிர் பிணைந்து
நம் உலகம்
நாமே மறந்து
நீ இழுக்கும் மூச்சை
நான் விட
நான் விடும் மூச்சை
நீ ஏந்த
உயிருக்கு உயிராய்
உயிரின் வேராய்
வேரின் மண்ணாய்
காதலிப்போம் வா!
காதலியே ! -நீயில்லா
காதலும் காதல் இல்லையே.