அன்பை விதைப்போம்

காடுகளை அழித்திட்டோம்
கனவுகளை தொலைதிட்டோம்
உறவுகளை மறந்திட்டோம்
உரிமைகளை இழந்திடோம்

தண்ணீருக்கு தவிக்கின்றோம்
தான் என்ற கர்வத்தில் தலை கணக்கின்றோம்
அன்பை மறந்து விட்டோம்
மனிதத்தை அழித்து விட்டோம்

மாசு மாசு என்று சொல்லி
மாசை காசு கொடுத்து வாங்குகின்றோம்
பாசமின்றி தவிக்கின்றோம்
பல வழியில் ஓடுகின்றோம்

காதலை காமத்தில் முடிக்கின்றோம்
சாதல் வரும் என்று தெரிந்தும்
சாவை அழிக்க முனைகின்றோம்
சாதிகளை வளர்த்தே சனாதன
சகதியில் விழுகின்றோம்

சாதிகளை கடந்தே
சமாதானமாய் இருப்போம்
இருப்பதை கொடுத்தே
இதயத்தை இனாமக பெறுவோம்
அன்பை விதைத்து
மனிதத்தை அறுவடை செய்வோம் ....!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (1-Oct-14, 12:39 am)
Tanglish : anbai vithaippom
பார்வை : 470

மேலே