பட்டாசு பேசுது
பட்டாசு பேசுது
==============
மண் விடுதலைக்கு துப்பாக்கி பேசியது
வீர உணர்வுக்கு தோட்டாக்கள் பேசியது
சிறிவர்கள் கைகளில் கை எரி குண்டு அனலைக் கக்கியது
தமிழச்சியின் மடியிலோ கன்னி வெடி வீரம் பேசியது -அனால்
மனிதம் மட்டும் தான் அங்கே நமுத்துப் போனது -நண்பர்களே
இங்கே தீபாவளிக்கு பட்டாசு பேசுகிறது ....................!
நான்
மாடிவீட்டு குழந்தைக் கையில் கரியகிப் போனேன்
மண் குடிசை குழந்தை மனசில் ஏக்க மாகிப் போனேன்
கரிசல் காட்டு குழந்தைப் போல கதியற்றுப் போனேன்
பிஞ்சு விரல்களின் கையில் நஞ்சாகிப் போனேன்
பாதுகாப்பு இல்லாத சிவகாசிப் பாதையிலே நடந்தேன்
பாவி மக்க உழைப்பை தின்று நெருப்பாகிப் போனேன்
ஏழைகளின் வயிற்றிலே எரி மலையாய் நின்னேன் - அவர்
கண்ணில் கண்ணீரா இருந்து வற்றி உலர்ந்துப் போனேன் .!
யாரு விட்ட சாபமிது சோத்த பார்த்து நாளாச்சி
பசியால் அழுத புள்ளைக்கு மாரில் பாலும் இல்லா நிலையாச்சி
கந்தகக் கரிப் பொடியில் ஈரக் கொல எரிஞ்சிப் போச்சி
மனிதம் இல்லா முதலாளி வாழ்வோ இமையமா உயர்ந்துப் போச்சி
வாயக் கட்டி வயிதக் கட்டி ஏழ மக்க செஞ்சி வச்சப் பட்டாசு
ஏழைகளின் வாழ்வைப் போல காஞ்சிப் போன பட்டாசு
தீஞ்சிப் போன வாழ்க்கையா கருகிப் போன பட்டாசு
உருக் குலைஞ்ச தொழிலாளியா சிதஞ்சிப் போன பட்டாசு
மொட்டகிப் போனப் புள்ள கெட்டுப் போயி வந்துட்டா
சிட்டாய்ப் பறந்தப் புள்ள சீக்குப் புடிச்சின்னு வந்துட்டா
காலமெல்லாம் உழசவனோ கஞ்சிக்கு அழுவுறான்
காசுப் பார்த்த மனுஷன் மட்டும் கண்டுக்காம இருக்குறான்
வேட்டுப் போட்ட மனுசங்களே ஏழ எங்கள பாருங்க
கொளிதிப் போட்ட பட்டாசா வாழ்வு சிதஞ்சிப் போனதுங்க
ஓட்ட வாங்க வந்தவங்க வேட்டையாடினு போனீங்க
சிவகாசி மண்ணுல மட்டும் பட்டாசு தொழிற்சாலை ஏன் எரியுதுங்க....?