ரம்யா சரஸ்வதி வீட்டு கொலுவில் அம்மன்

மாக்கோலம் வாசலில் மங்கலமாய் பூத்திருக்க
நீக்கமற தேவி நிறைந்திருப்பாள் - நோக்குங்கால்
நல்விழா வீட்டில் நவராத் திரிகொலு
சொல்லிடும் சக்தியின் மாண்பு !

சக்தியிடம் வேல்வாங்கும் சண்முகன் சிக்கலில்
சொக்கு மழகினில் சுந்தரன் ! - பக்தியுடன்
கும்பிடத் தீர்ப்பான் குறைகள், பரிவுடன்
நம்புவோர்க்கு நற்துணையா வான்.


(சிக்கலில் அன்னை வேல்நெடுங்கண்ணி சூரசம்ஹாரம் செய்ய முருகனுக்கு வேல் வழங்கி ஆசி வழங்கினாளாம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Oct-14, 2:52 pm)
பார்வை : 93

மேலே